பட்ஜெட் விலையில் நல்ல மைலேஜ்.. இப்போ நல்ல ஆஃபர் கூட இருக்காம் – Hero Electric Flash விலை மற்றும் ஸ்பெக் இதோ!
மின்சார ஸ்கூட்டர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன, ஒன்று குறைந்த வேகம் மற்றும் மற்றொன்று அதிக வேகம் கொண்ட ஸ்கூட்டர்கள். இந்தியாவின் மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி, 250Wக்கும் குறைவான ஆற்றல் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 23 கிலோமீட்டருக்கும் குறைவாக உள்ள மின்சார வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு தேவையில்லை.
அந்த வகையில் பல முன்னணி நிறுவனங்கள் இப்பொது எலக்ட்ரிக் வாகன விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மின்சார ஸ்கூட்டர் தான் Hero Electric Flash. இதில் 250 வாட் BLDC மோட்டார் உள்ளது, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும், மேலும் இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை செல்லும். இதன் ஆரம்ப விலை சுமார் 59,000.
இதற்கு EMI வசதிகளும் உள்ளது, குறைந்தபட்சம் மாதம் 2000 ரூபாய்க்கு கூட EMI மூலம் இந்த வாகனத்தை மக்கள் வாங்கி பயன்படுத்தலாம் என்று ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஃப்ளாஷ் LA மாறுபாடு 48 வாட் 20Ah லீட்-ஆசிட் பேட்டரியுடன் வருகிறது, அதே நேரத்தில் LI மாறுபாடு 48 வாட் 28Ah லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது.
மேன்பட்ட அனுபவத்திற்காக இதில் சஸ்பென்ஷனுக்காக, ஹீரோ ஃப்ளாஷ் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் ட்வின் ஷாக் சஸ்பென்ஷனையும் கொண்டுள்ளது. இது 16 இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த திறன்கொண்ட வண்டி என்பதால் இதை பயன்படுத்த ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.