Shubman Gill Run Out: 91 ரன்னில் ரன் அவுட்டான சுப்மன் கில் – சரியான வேலையை பார்த்துவிட்ட குல்தீப் யாதவ்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. இதில், ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அதன் பிறகு சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்து 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து குல்தீப் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவரும் 4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சிக்ஸரை பறக்கவிட்டார்.

இந்த நிலையில் தான் டாம் ஹார்ட்லி ஓவரில் குல்தீப் யாதவ் இறங்கி அடிக்க முயற்சிக்க, நான் ஸ்டிரைக்கில் 91 ரன்கள் எடுத்து சதம் அடிக்க கில் காத்துக் கொண்டிருந்தார். அவர், ஓட முயற்சிக்கவே பென் ஸ்டோக்ஸ் பவுலர் கைக்கு பந்தை த்ரோ செய்ய, ஹார்ட்லி சரியாக ரன் அவுட் செய்து மூன்றாவது நடுவரிடம் முறையிட்டனர். இதில், கில் அவுட் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு முன்னதாக முதல் இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் 62 ரன்களில் நான் ஸ்டிரைக்கில் ரன் அவுட் செய்யப்பட்டார். தற்போது வரையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில்,யஷஸ்வி ஜெய்ஸ்வால் 149 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *