இது தெரியுமா ? காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால்…

சமையலைப் பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும். பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது. கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு மிகச் சிறந்த பங்காற்றுகிறது. இந்த பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நல்ல சீரண சக்தியை நீங்கள் பெற முடியும். டயாபெட்டீஸ் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவுகிறது.

சரி வாங்க இந்த பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகளை நாம் பெற முடியும் என அறிவோம்.

​செரிமானத்திற்கு உதவுகிறது :

காலையில் எழுந்ததும் பூண்டு சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவும். பூண்டு உங்க செரிமான கோளாறுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து எடையை குறைக்க உதவுகிறது. எனவே எடை அதிகமாக இருக்கும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது :

பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நீரிழிவு நோய், மன அழுத்தம் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை அகற்ற இது உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்க பூண்டு உதவுகிறது :

பச்சை பூண்டை உட்கொள்வது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

காசநோய்க்கு பயன்தரும் பூண்டு :

காசநோய் போன்ற சுவாச பாதையில் ஏற்படும் சளித்தொல்லைக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். தினந்தோறும் பூண்டு சாப்பிடுவது காசநோய் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

பூண்டு சளி மற்றும் இருமலுக்கு பயன்படுகிறது :

சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு பூண்டு சிறந்த தீர்வளிக்கிறது. தினமும் ஒரு டம்ளர் தண்ணீருடன் பூண்டை சேர்த்து சாப்பிடுவது சளி அபாயத்தை குறைக்க உதவும்.

இதய நோய்களை தடுக்கிறது :

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்க பூண்டு உதவுகிறது. இதயக் குழாய்களில் கொழுபு்புகள் சேருவதைத் தடுக்கிறது. அதனால் மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது :

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் பூண்டு சாப்பிடுவது கண் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

​சிறுநீரக பாதை நோய்த்தொற்றை தடுக்கிறது :

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிறுநீரக பாதை நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே அதை தடுக்க பெண்கள் பூண்டை சாப்பிடுவது நல்லது.

7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்.இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது.

தேவையான பொருட்கள்
தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகள் 20.
தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)

செய்முறை
பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும் தன்மையுடையது)

நன்மைகள்
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.

உட்கொள்ளும் முறை
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

பூண்டு
பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது. எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர்.

பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பூண்டு இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தேன்
உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

பூண்டு, தேன்
நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *