வீடு போய் விடுமோ என்ற அச்சத்தில் மக்கள்… ஒரே ஒரு போன் காலில் தீர்வு கண்ட எம்.பி கதிர் ஆனந்த்..!
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்கதிர் ஆனந்த், திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்றிருந்தார்.
அப்போது திடீரென அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி கதிர் ஆனந்தனிடம் முறையிட்டனர். அவர்கள் கூறியதாவது ” இங்கு நாங்கள் பல ஆண்டுக்களாக வாழ்ந்து வருகிறோம்…. பேருந்து நிலையம் கட்டுவதாக சொல்லி அதிகாரிகள் எங்கள் வீட்டை காலி செய்ய வற்புறுத்துகின்றனர். இதன் காரணாமாக எங்களால் எங்கள் சொந்த வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. எப்போ எது நடக்குமோ… எங்கள் வீடு எங்களை விட்டு போய் விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாங்கள் என்ன செய்வது என தெரியவில்லை. நீங்கள் தான் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை சொல்ல வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கைகளை கேட்ட எம்.பி கதிர் ஆனந்த் பேசியதாவது, உங்கள் தொகுதி எம்.பி நான் இருக்கேன்…மக்களுக்கு என்ன தேவையோ அது செய்ய தான் நாங்க இருக்கோம்.. கவலை பட வேண்டாம்.இதற்கு உடனே தீர்வு காணப்படும் என கூறியதுடன் உடனடியாக சம்மந்தப்பட்ட தாசில்தாருக்கு போன் செய்து விவரத்தை கேட்டு அறிந்தார்.
மேலும் பேருந்து நிலையத்திற்கு அரசு நிலத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு பேருந்து நிழற்கூடம் கட்டுங்கள், ஆனால் பட்டா நிலத்தில் உள்ள வீடுகளில் ஒரு செங்கலையும் எடுக்கக்கூடாது என ஆணையிட்டார். இதனால் உற்சாகமடைந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.