அல்லி மலர் வளர்ப்பில் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் கேரளப் பெண்..!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த தோட்டத் தொழில் ஆர்வலரான விஜி அபி, பல்வேறு வகையான அல்லிப் பூக்களை வளர்த்து, மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறார். இன்டர்நேஷனல் வாட்டர் லில்லி மற்றும் வாட்டர் கார்டனிங் சொசைட்டியில் இருந்து கற்றுக்கொண்டு, அவர் ஒரு கலப்பின வகை லில்லி மலரை உருவாக்கினார்.

வழக்கமான தனது வீட்டு வேலைகளை முடித்த பிறகு, விஜி அபி ஆவலுடன் எதிர்பார்ப்பது தனது வீட்டுத் தோட்டத்தைப் பராமரிப்பது மற்றும் உலகெங்கிலும் உள்ள தனது தோட்டக்கலை நண்பர்களுடன் கலந்துரையாடுவது தான்.

கேரளாவின் திருச்சூரில் உள்ள அவரது தோட்டத்துக்குள் நுழைந்தவுடன், பூக்கும் அல்லி மலர்களின் மனம் பறிக்கும் காட்சி உங்களை வரவேற்கும், இருப்பினும். அவரது தோட்டத்தின் தனித்துவமான அம்சம் என்றால் கவர்ச்சியான நிறத்தில் உள்ள அல்லிகளைக் கொண்ட நீர் அல்லி பானைகள் ஆகும்.

இந்தியாவின் அபூர்வமான ஒரு சில நீர் அல்லி கலப்பினங்களில் ஒன்றாக, விஜியின் தோட்டம் பெருமையுடன் அவர் பயிரிடப்பட்ட Nymphaea Sree நிம்பியா ஸ்ரீ என்ற கலப்பின வகை அல்லி அலங்கரிக்கிறது.

இது பற்றி அவர் கூறுகையில் எனக்குத் தோட்டக்கலை ஒரு ஓய்வு நேர நடவடிக்கையாகத் தொடங்கியது, அதுவே பின்னர் அடங்காத ஆர்வமாக மாறியது. இதில் அல்லி மலர்கள் என்னை ஈர்த்தன. எனவே அல்லி செடிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன, எந்த ரகங்கள் உயிர்வாழும் என்று நான் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தேன். இப்போது, நல்ல சீசனில் அல்லி பலர்களை விற்று மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறேன் என்றார்.

மேலும் விஜி தனது ஆரோக்கியமான மற்றும் பசுமையான தோட்டத்தின் பின்னணியில் உள்ள ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார். பசுமையான தாவரங்கள் மீது பற்று கொண்டு அல்லி மலர்களை வளர்த்துவரும் விஜி, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தோட்டக்கலைக்காக செலவிட விரும்புகிறார்.

முழுநேர தோட்டக்காரராக மாறுவதற்கு முன்பு, அவர் ஒரு கணக்காளராக இருந்தார். இது இரண்டு வெவ்வேறு உலகங்கள் போல் தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை, தோட்டக்கலை என்னை முழுமையாக உணர்த்துகிறது. எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது, நானும் என் கணவரும் பணிகளை பகிர்ந்துக்கொண்டு வாழ்ந்தோம்.

அதனால் குழந்தைகளை வளர்ப்பதற்காக எங்களில் ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டியதாயிற்று. அப்போதுதான் நான் என் வேலையை விட்டுவிட முடிவு செய்தேன். உலகில் எனக்கு சொந்தமான ஒன்றை உருவாக்கி விட்டுச் செல்ல நான் எப்போதும் விரும்பினேன்.

2008 ஆம் ஆண்டில், குழந்தை பிறந்தவுடன், தோட்டத்தில் நிறைய நேரம் செலவிட்டேன். குழந்தையையும் தோட்டத்தையும் பராமரிப்பது எனக்கு ஆறுதல் அளித்தது.

போகன்வில்லா, ஆர்க்கிட் மற்றும் ரோஜாக்களை வளர்க்க தொடங்கினேன். என் தோட்டத்தில் நிறைய பூக்கள் பூத்தன. அதிலிருந்து விதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஃபேஸ்புக்குக்குச் சென்றேன். பல்வேறு தாவரங்களை வாங்குவதற்கு நிறைய பேர் ஆர்வமாக இருப்பதைக் கண்டேன். பல நீர் தாவரங்கள் வளர்வதையும் கண்டேன். நான் அதையும் முயற்சி செய்ய முடிவு செய்தேன்.

2018 ஆம் ஆண்டில் நான் முதல் தண்ணீர் செடியை வாங்கினேன். அதை எனக்கு எப்படி வளர்ப்பது, வளர்த்து வேறு பானையில் நடுவது என்று தெரியவில்லை. இதனால் இன்டர்நெட் உதவியுடன் தோட்டக்காரர்கள் நிறைந்த குழுவில் சேர்ந்து பல வழிகளைக் கற்றுக் கொண்டேன்.

இன்டர்நேஷனல் வாட்டர் கார்டனிங் சொசைட்டியில் சேர்ந்து நிறைய அறிமுகங்களை ஏற்படுத்திக் கொண்டேன். பின்னர் தண்ணீர் தாவரங்களை வளர்க்கத் தொடங்கினேன். அல்லி மலர்களை வாங்கினேன். அது நான் செய்த தவறு. கேரள தட்பவெப்பநிலைக்கு அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஆனாலும் அந்தச் செடியை எப்படியாவது வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு எனது வீட்டுத் தோட்டத்தில் 100 வகையான அல்லி மலர்களை வளர்க்கிறேன்.

இன்டர்நேஷனல் வாட்டர் கார்டனிங சொசைட்டி உறுப்பினர்கள் மூலம் எனது அல்லி மலரை ஹைப்ரிட் செய்தேன்.

இந்த அல்லி மலருக்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்டு இருக்கிறது. பேஸ்புக் மூலமாக அல்லியை உலகம் முழுவதும் விற்கிறேன். இதன்மூலம் எனக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அல்லி மலர் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் நல்ல தரமான வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்ததாக பெரிய பானையைத் தேர்ந்தெடுத்து மலரை நட்டு வளர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் 6 அங்குலம் முதல் 18 அங்குலம் வரை மலர் இருக்கும். பானைகளை நல்ல சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்க வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.

சரியான ஆலோசனை தரும் தோட்டக்கலை நிபுணர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி பயன் பெற வேண்டும் என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *