கம்பு சாப்பிட்டா எடை குறையுமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கங்க…
கம்பு நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட மிக முக்கியமான உணவாகும். இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைய தலைமுறைக்கு கம்பு என்றால் என்னவென்றே தெரிவதில்லை. அதிகபட்சமாக வெயில் காலங்களில் சாலையோரங்களில் மட்டும் தான் கம்பங்கூழ் வைத்து விற்கிறார்கள். இது உடல் எடையைக் குறைக்க எப்படி உதவுகிறது என்று தெரிந்து கொண்டு அதை உங்களுடைய தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கம்பு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்ற ஒரு தானியமாகும். குறிப்பாக இதில்,
புரதச்சத்து,
நார்ச்சத்து,
மெக்னீசியம்,
பொட்டாசியம்,
இரும்புச்சத்து
உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதோடு குளுட்டன் அழற்சி இல்லாதது. செலியாக் போன்ற பிரசசினை உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த உணவாக இருக்கும். உடலின் செரிமான ஆற்றலை மேம்படுத்தும்.
எடை குறைக்க கம்பு நல்லதா?
ஆம், உடல் எடையைக் குறைப்பதற்கு கம்பு மிகச்சிறந்த உணவு தான். அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் சாப்பிட்டு நீண்ட நேரம் வரையிலும் பசயைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும்.
உணவு சாப்பிட்டதும் நிறைவைக் கொடுக்கும். இதிலுள்ள காம்ப்ளக்ஸ் கார்போ1ட்ரேட் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும். அதேசமயம் கலோரியும் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ள ஒரு தானியம்.
டயட்டில் இருப்பவர்கள் ஏன் கம்பை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம் வாங்க…
அதிகப்படியான நார்ச்சத்துக்கள்
கம்பில் நார்ச்சத்தின் அளவு அதிகம். இது சாப்பிட்டு நீண்ட நேரம் வரையிலும் வயிறு முழுமையாக இருக்கிற உணர்வைக் கொடுக்கும்.
இதை உங்களுடைய வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, தேவையற்ற மற்ற ஜங்க் உணவுகள், இடையிடையே ஸ்நாக்ஸ்கள் சாப்பிடும் எண்ணத்தைத் தடுக்கும்.
இதனால் செரிமான ஆற்றல் அதிகரித்து, உடலின் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.
அதிகப்படியான புரதங்கள்
தாவர அடிப்படையிலான புரதங்கள் கம்பில் அதிக அளவு இருக்கிறது. இது தசையில் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்வதோடு, தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
தசையில் உள்ள திசுக்கள் கொழுப்புத் திசுக்களை விட அதிகமாகக் கலோரிகளை எரிப்பதால் தசை வளர்ச்சி மேம்படும். எடை இழப்பும் வேகமாக நடக்கும்.
குறைந்த கலோரி
கம்பில் அரிசி, கோதுமையை ஒப்பிடும்போது கலோரிகள் மிக மிகக் குறைவாக உள்ளது. அதேசமயம் கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு நிறைவாக இருக்கும்.
இதனால் அதிக கலோரிகள் சேருவத தடுக்கபபட்டு எடை இழப்பு அதிகரிக்கும்.
ஊட்டச்சத்து நிறைந்தது
கம்பில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
இவை வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான நொதிகளை ஊக்குவிக்கவும் ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைக்கவும் உதவி செய்கிறது.
க்ளூட்டன் இல்லாதது
கோதுமையைப் போல கம்பில் குளுட்டன் கிடையாது. அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கூட கம்பை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பாக, க்ளுட்டன் அழற்சி பிரச்சினை உள்ளவர்கள், செலியாக் நோய் உள்ளவர்களுக்கு, கம்பு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இது உடல் எடையை வேகமாக இழக்க உதவி செய்யும்.