பாக்ஸ் ஆபிஸில் படிப்படியாக பிக் அப் ஆகும் சைரன்… 2ம் நாளில் அதிரடியாக எகிறிய வசூல் – அதுவும் இத்தனை கோடியா?
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜெயம் ரவி. இவர் சோலோ ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு திரைக்கு வந்த அகிலன், இறைவன் ஆகிய இரண்டு படங்களும் படு தோல்வியை சந்தித்தன. இதனால் அவரின் மார்க்கெட்டும் சற்று சரிவை சந்தித்தது. அந்த சரிவில் இருந்து மீள அவர் மலைபோல் நம்பி இருந்த திரைப்படம் தான் சைரன். இப்படம் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி திரைக்கு வந்தது.
சைரன் திரைப்படத்தை அந்தோணி பாக்கியராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் சோலோவாக இப்படத்தை ரிலீஸ் செய்தது.
ஜெயம் ரவி கெரியரில் அவர் சோலோ ஹீரோவாக நடித்து அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படமும் இதுதான். சைரன் திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது. இதனால் முதல் நாளில் ரூ.1.40 கோடி வசூலித்திருந்த சைரன் திரைப்படம், இரண்டாம் நாளில் அதைவிட கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது,
அதன்படி இரண்டாம் நாளில் சைரன் திரைப்படம் ரூ.1.73 கோடி வசூலித்து இரண்டு நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ.3.43 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் சைரன் திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இறைவன் படத்தின் தோல்வியால் துவண்டு இருந்த ஜெயம் ரவிக்கு சைரன் திரைப்படம் கம்பேக் படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.