சைரன் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் சொத்து மதிப்பு… 28 வயசுலயே இத்தனை கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரியா?
மலையாள திரையுலகின் மாஸ்டர் பீஸ் படமான பிரேமம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தில் நடிகர் நிவின் பாலியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்திருந்தார் அனுபமா. அப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அனுபமா, தனுஷின் கொடி படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா, அந்த ஆண்டே டோலிவுட்டிலும் அறிமுகம் ஆனார்.
டோலிவுட்டில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா. கடந்த ஆண்டு மட்டும் அனுபமா நடிப்பில் 5 தெலுங்கு படங்கள் வெளிவந்தன.
இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் தெலுங்கில் அவர் நடித்த ஈகிள் திரைப்படம் திரைக்கு வந்த நிலையில், அதற்கு அடுத்தவாரமே தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த சைரன் திரைப்படம் வெளியானது. இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்கி உள்ளார்.
இவருக்கு படத்துக்கு படம் சம்பளம் எகிறி வருகிறது. தற்போது ஒரு படத்துக்கு ரூ.1 கோடி சம்பளமாக வாங்கி வரும் அனுபமா, அதே அந்த படத்தில் லிப்லாக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு கூடுதலாக 50 லட்சம் கேட்டு ரூ.1.50 கோடியாக சம்பளம் வாங்குகிறாராம்.
சமீபத்தில் இவர் டில்லு ஸ்கொயர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் அனுபமா. அதில் லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருப்பது டீசரிலேயே தெரியவந்தது. நடிகை அனுபமாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 60 லட்சம் பாலோவர்கள் உள்ளனர்.
இதுதவிர விளம்பரங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். அவர் ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ.40 முதல் 50 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இப்படி குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டுள்ள அனுபமா இன்று தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அனுபமாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் நடிகை அனுபமாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சினிமாவில் அறிமுகமான 9 ஆண்டுகளில் அவர் ரூ.35 கோடிக்கு மேல் சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறாராம். இதுதவிர அவரிடம் ஏராளமான சொகுசு கார்கள் மற்றும் கேரளாவில் ஆடம்பரமான சொந்த வீடும் உள்ளது.