நெக்ஸானுக்கு போட்டியாக 8 லட்சத்தில் ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி வருகையா.!

வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி பத்திரிக்கையாளர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஸ்கோடா இந்தியா நிறுவனம், தனது காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் முதல் எலக்ட்ரிக என்யாக் iV அறிமுகம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களான டாடா நெக்ஸான், பிரெஸ்ஸா, வெனியூ, சொனெட்XUV300, கிகர், மற்றும் மேக்னைட் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் தனது மாடலை 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் மாடலாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

5 இருக்கை பெற்ற ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி முக்கிய விபரம் ;-

MQB-A0 (IN) பிளாட்ஃபாரத்தில் மிகவும் உறுதியான கட்டுமானத்தை கொண்டதாக வரவுள்ளது.

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி காரில் 110hp, 178 Nm டார்க் உற்பத்தி செய்கின்ற 1.0 லிட்டர் TSI மூன்று சிலிண்டர் என்ஜின் பெற வாய்ப்புள்ளது.

இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற வாய்ப்புள்ளது.

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களான ESC, ஏபிஎஸ் உடன் இபிடி 6 ஏர்பேக்குகள் கொண்டு ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற வாய்ப்புள்ளது.

மிதக்கும் வகையிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், சன்ரூஃப் மற்றும் முன்பக்கத்தில் காற்றோட்டமான இருக்கைகள் உட்பட பலவற்றை எதிர்பார்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *