வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த ‘Nissan One’ இணையத்தளம் அறிமுகம்..!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவிகளுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் தனது மேக்னைட் எஸ்யூவி-யை ( Magnite SUV) கடந்த 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் நிறுவனம் அதன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மேக்னைட் ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனத்தை விற்பனை செய்துள்ளது.
இந்த நிலையில், நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் 2024-ஆம் ஆண்டில் 1,00,000 Magnite கார்களை விற்பனை செய்துள்ள சாதனையை கொண்டாடும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையிலும் ‘NISSAN ONE’ எனப்படும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சிங்கிள்-ஆன் வெப் பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய முயற்சியின் கீழ் தற்போது உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு அம்சங்களை பெற முடியும் என்று நிசான் நிறுவனம் கூறியுள்ளது. நிசான் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புதுமையான வெப் பிளாட்ஃபார்மானது வாடிக்கையாளர்களுக்கு ஆரம்ப கட்ட விசாரணை, டெஸ்ட் டிரைவை முன்பதிவு செய்தல், தங்களுக்கு விருப்பமான காரைத் தேர்வு செய்தல் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சர்விஸ் கோரிக்கைகளை மேற்கொள்வதற்கான பரந்த அணுகலை செயல்படுத்தும் வகையில் இந்த NISSAN ONE வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிசானின் இந்த புதிய அறிமுகம் இந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பல வாடிக்கையாளர் டச்பாயின்ட்ஸ்களை ஒரு யூஸ்ர்-ஃபிரெண்ட்லி பிளாட்ஃபார்மாக ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தவிர நிறுவனத்தின் இந்த முன்முயற்சி இந்தியாவிற்கான தற்போதைய மாற்றத் திட்டத்துடன் ஒத்துப்போகிறது. இதில் புதிய மேக்னைட் வேரியன்ட்ஸ்களை அறிமுகப்படுத்துதல், நெட்வொர்க்கை விரிவுப்படுத்துதல் மற்றும் புதிய தலைவர்களை நியமித்தல் உள்ளிட்டவை அடங்கும்.
நிசான் மோட்டார் இந்தியாவின் மார்க்கெட்டிங், ப்ராடக்ட் மற்றும் கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் டைரக்ட்டர்மோகன் வில்சன் பேசுகையில், “NISSAN ONE-ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார். இது எங்களின் ‘கஸ்டமர் ஃபர்ஸ்ட்’ தத்துவத்தை பிரதிபலிக்கிறது. எங்கள் தயாரிப்புகளை வாங்கி இருக்கும் மற்றும் வாங்க நினைக்கும் மக்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய இது பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
நிறுவனத்தின் செய்திக்குறிப்பு ஒன்றின்படி, NISSAN ONE பல வெப்சைட்ஸ் மற்றும் பிளாட்ஃபார்ம்களின் தேவையை நீக்கி வாடிக்கையாளர் அனுபவத்தை எளிதாக்குகிறது. மேலும் இது சர்விஸ் ரிமைண்டர்ஸ் போன்ற வாடிக்கையாளர் விருப்பங்களின் அடிப்படையில் டார்கெட்டட் கம்யூனிகேஷனை செயல்படுத்துகிறது. மேலும் NISSAN ONE-ன் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது ரியல்-டைம் சர்விஸ்களை புக் செய்யலாம். மொத்தத்தில் இந்த புதிய வெப் பிளாட்ஃபார்ம் நிசான் மோட்டார் இந்தியாவுடனான வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது.