விஜய் 69 ஐ இயக்க உள்ளவர்கள் பட்டியலில் தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் பெயரும் சேர்ந்தது
சென்னை: விஜய் 69 படத்தின் இயக்குனர்கள் பட்டியலில் புதிய பெயர் இணைந்துள்ளது. அதன்படி தெலுங்கு பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம்தான் அவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் “தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர்சூட்டியிருப்பதாக அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பில், தற்போது நடித்து வரும் கோட் படம் தவிர்த்து, மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதை விஜய் உறுதிப்படுத்தி இருந்தார்.