நடிகை சமந்தாவின் புதிய ‘பாட்காஸ்ட்’… எதை பத்தி பேச போறாங்க தெரியுமா?
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, புதிய பாட்காஸ்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா.
அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை சமந்தா தசை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் ஓய்வெடுக்கவும் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த சமந்தா தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் உடல் ஆரோக்கியம் குறித்து TAKE 20 என்ற பெயரில் பாட்காஸ்ட் ஒன்றை தொடங்கியிருக்கிறார் சமந்தா. இதுகுறித்த அறிவிப்பை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.