மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சன் டிவி நடிகை.! ஏன்? அவருக்கு என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் நடிக்க துவங்கி மக்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை நிவிஷா.
அதனைத் தொடர்ந்து அவர் பொன்னூஞ்சல், ஓவியா, யாரடி நீ மோகினி, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மலர் தொடரிலும் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த தொடரின் மூலம் நடிகை நிவிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் அந்த தொடரில் இருந்து விலகுவதாக கூறினார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு அதிகளவு ஃபாலோவர்ஸ்களை கவர்ந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை நிவிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,’ கடந்த ஒரு சில தினமாக உடல்நலப் பாதிப்புடன் உள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது மெதுவாக குணமடைந்து வருகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவரது ரசிகர்கள் நிவிஷா உங்களுக்கு என்ன ஆச்சு?? என பதட்டத்துடன் கேட்டு வருகின்றனர்.