இதுக்கு தான் இவ்ளோ சீன் போட்டீங்களா..? வெறும் 122 ரன்களில் ஆல் அவுட்டான இங்கிலாந்து; வரலாறு படைத்தது இந்திய அணி !!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கட் 153 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காததால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்பின் 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 214* ரன்களும், சுப்மன் கில் 91 ரன்களும், சர்பராஸ் கான் 68* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 430 ரன்கள் எடுத்துவிட்டு டிக்ளேர் செய்தது.