நுரையீரலை வஜ்ரம் போல் வலுவாக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்..!!

இந்தியாவில், நுரையீரல் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு. ஐந்து சதவீதம் என்ற அளவில் இருந்து, ஆறு. நான்கு % என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நுரையீரல் பலவீனமடைந்தால், மூச்சு திணறல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா போன்றவை அதிகரிக்கும். மேலும் புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கும், நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நுரையீரலை வலுப்படுத்தும் சில யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். நுரையீரலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க யோகாசனங்கள் பெரிதும் உதவும். தொடர்ந்து யோகா பயிற்சிகள் செய்வதன் காரணமாக, நுரையீரல் செயல்பாடு மேம்படும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புஜங்காசனம்

புஜங்காசனம், சூரிய நமஸ்காரத்தில் செய்யப்படும் ஒரு முக்கிய ஆசனம். இந்த ஆசனத்தை செய்ய முதலில் குப்புறப் படுத்துக்கொண்டு, இரு உள்ளங்கள்களையும் தரையில் ஊன்றி கொண்டு, பாம்பு படம் எடுத்து இருப்பது போல், தலையை தூக்கி மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புஜங்காசனம் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில், மார்பு கழுத்து தோள்பட்டை ஆகிய பகுதிகளை செய்கிறது. மார்பு நன்கு அகன்று இருக்கும் நிலையில், ஆழ்ந்த சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ரத்தத்துக்கு அதிக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட்டு, உடலும் புத்துணர்ச்சி பெறும். புஜங்காசனத்தில் நன்கு மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு, ஒன்று முதல் 15 வரை எண்ணிக் கொள்ளவும். பின்னர் மூச்சை வெளியே விட்டபடியே, தலையையும் மார்பையும் கீழே இறக்கி கொள்ள வேண்டும்

உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனம் என்பது ஒட்டக நிலையை கொண்ட ஆசனம். புஜங்காசனத்தை போலவே உஸ்ராசனத்திலும், நுரையீரல் நன்கு விரிவடைந்து, உடலுக்கு ஆக்சிஜன் பெருமளவு கிடைக்கும். உடலின் நடுப்பகுதியை பின்னோக்கி வளைப்பதன் மூலம் செய்யப்படும் இந்த ஆசனம், மார்பு பகுதியை மட்டுமல்லாது இடுப்பையும் வலுப்படுத்துகிறது. முதுகு தண்டிலும் நிகழ்வு தன்மையை ஏற்படுத்துகிறது. உஸ்ட்ராசனம் செய்ய, முதலில் முழங்காலில் நிற்கவும். பின்னர் உடலை வளைத்து, மெதுவாக பின்னால் சாய்ந்து மெல்ல முயன்று குதிகாலைக் கையால் பிடித்து கொள்ளுங்கள். இப்போது தலையும் முதுகையும் பின்னோக்கி சாய்த்து, முடிந்தவரை கீழ் நோக்கி செல்லவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *