இளம் வயதினருக்கும் ஹார்ட் அட்டாக்… தடுக்க, தவிர்க்க செய்ய வேண்டியவை!

Preventing Heart Attack & Its Symptoms: முன்பெல்லாம், வயதானவர்கள் மட்டுமே பாதிக்கப்படும் நோயாக இருந்த ஹார்ட் அட்டாக் என்னும் மாரடைப்பு, தற்போது இளம் வயதினரையும் குறி வைக்கிறது.

இதற்கு நவீன கால வாழ்க்கை முறையே பிரதானமான காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்நிலையில், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், தவிர்க்கவும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

மாரடைப்பிற்கான காரணங்கள்

மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம், நமது இதய தமனிகள் சேதமடைவதுதான். தமனிகள் சேதமடைந்ததன் காரணமாக, இதயத்திற்கு ஆக்சிஜன் சப்ளை சரிவர கிடைக்காமல் போகின்றன. தமனிகள் சேதம் காரணமாக, இதயத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது தடுக்கப்பட்டு, அதனால் இதய தசைகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதை கவனிக்காத போது, மாரடைப்புக்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கின்றன.

மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ள நபர்கள்

1. உணவில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்கள், கொலஸ்ட்ரால் அதிக அளவு இருப்பவர்கள்.

2. நீண்ட காலம் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ள நபர்கள்.

3. அதிக அளவில் புகை பிடிப்பவர்கள்.

மாரடைப்பு தடுக்க, தவிர்க்க செய்ய வேண்டியவை

உணவு

இன்றைய நவீன அவசர கதியில் ஆன வாழ்க்கையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது இல்லாத நிலை உள்ளது. கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த ஊட்டச்சத்து இல்லாத, துரித உணவுகள், ஆரோக்கியத்தை பதம் பார்க்கின்றன. உடல் நோயின் கூடாரம் ஆகிவிட்டது. துரித உணவுகளை எப்போதாவது ஒரு தடவை எடுத்துக் கொள்வதால் பிரச்சனை இருக்காது. ஆனால் அதனை வழக்கமாகக் கொண்டால், சிக்கல் தான். டயட்டில், சிறுதானியங்கள், பழச்சாறுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உலர் பழங்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பச்சை காய்கறிகள் ஆகியவை நிரம்பி இருக்க வேண்டும்.

தூக்கம்

நவீன யுகத்தில், செல்போன் கம்ப்யூட்டர் என இரவு முழுவதும் நேரத்தை செலவழித்து, அரைகுறை தூக்கத்துடன் பகலில் விழிப்பதால், நமது உடலின் பேட்டரி சார்ஜ் ஆகாமல், மிகவும் சோர்ந்து போகிறோம். இரவு தூக்கம் இல்லாத காரணத்தினால், இரவில் சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்காமல் போவதால், மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்துடன் கூடவே, நீரிழிவு, பிபி என அனைத்தும் கூட வருகின்றன. இரவு நேர நல்ல தூக்கம், மாரடைப்பை தடுப்பதற்கான அற்புத மந்திரம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *