30 நாட்களுக்குள் முகப்பருவை நிரந்தரமாக அகற்றிவிடலாம்- மருத்துவர் கூறும் டிப்ஸ்
என்னதான் நம் முகம் கலராகவும் பொலிவாகவும் இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.
முகப்பருக்களை அகற்றி சரும பொலிவிற்கு தீர்வு காண மருத்துவர் ரோமிகா சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
மருத்துவரின் கூற்று
- தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நிம்மதியான உறக்கம் மிகவும் அவசியம்.
- காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்கவும்.
- வியர்வை வரும்வரை தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யவும்.
- நடைப்பயிற்சி முடிந்ததும் 200ml வெண்பூசணி அல்லது சுரைக்காய் ஜூஸ் குடிக்கவும்.
- காலை உணவாக முளைகட்டிய பயிறு, வேகவைத்த பயிறு மற்றும் பழங்களின் சாறு, காய்கறிகளின் சாறு போன்றவை குடிக்கலாம்.
- மதிய பொழுதில் உணவு உண்ட பின் படுத்திருப்பது, தூங்குவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- மேக்கப் பொருட்கள், பேஸ்வாஷ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இரவு தூங்கும்பொழுது சீரம் போன்றவை முகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
- துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். குளிர்ந்த நீரை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
- தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.
- இரவு உணவை 7- 8 மணிக்குள் சாப்பிடுவது அவசியம். சாப்பிட்ட பின்பும் உறங்குவதற்கும் இடையில் 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.