சர்பராஸ் கானுக்கு மட்டும் டீமில் இடம்.. இந்த தமிழக பேட்ஸ்மேன் புறக்கணிப்பு.. தினேஷ் கார்த்திக் வேதனை

இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுத்தது போல உள்ளூர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி ரன் குவித்து வரும் தமிழக பேட்ஸ்மேன் பாபா இந்திரஜித்துக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அவரது பேட்டிங் சராசரி 77க்கும் மேல் உள்ளது ஆனாலும் இந்தியா ஏ அணியில் கூட அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை என தினேஷ் கார்த்திக் வேதனையுடன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சர்ஃபராஸ் கானின் முதல் தர டெஸ்ட் போட்டி பேட்டிங் சராசரி 69 ஆக உள்ளது. அதே சமயம் தமிழக வீரர் பாபா இந்திரஜித்தின் பேட்டிங் சராசரி 52 ஆக உள்ளது. எனினும், அவர் கடந்த ஏழு ரஞ்சி ட்ராபி சீசன்களிலும் சிறப்பாக ஆடி உள்ளார். எந்த ஒரு சீசனிலும் அவரது பேட்டிங் சராசரி 50க்கு கீழ் செல்லவில்லை. அந்த அளவுக்கு நிலையான பேட்ஸ்மேனாக ரஞ்சி ட்ராபி தொடரில் முத்திரை பதித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு இந்தியா ஏ அணியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அது குறித்து தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், சர்ஃபராஸ் கான் தனது அறிமுகப் போட்டியில் சிறப்பாக ஆடிய நிலையில், நான் பாபா இந்திரஜித்துக்காக ஏங்குகிறேன். அவரது கடந்த சில ரஞ்சி ட்ராபி சீசங்களை பாருங்கள் –

2016 – 697 ரன்கள் – பேட்டிங் சராசரி 63.4, 2 சதம், 5 அரைசதம்

2017 – 405 ரன்கள் – பேட்டிங் சராசரி 58, 1 சதம், 2 அரைசதம்

2018 – 641 ரன்கள் – பேட்டிங் சராசரி 58.3, 2 சதம், 4 அரைசதம்

2019 – 89 ரன்கள் – பேட்டிங் சராசரி 44.5, 1 அரைசதம் (காயத்தால் தொடரில் விலகினார்)

2021 – 396 ரன்கள் – பேட்டிங் சராசரி 99, 3 சதம், 1 அரைசதம்

2022 – 505 ரன்கள் – பேட்டிங் சராசரி 50.5, 1 சதம், 3 அரைசதம்

இந்த ஆண்டையும் சேர்த்து ஏழு ஆண்டுகளாக இத்தகைய சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இந்தியா ஏ அணியில் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என நான் நம்புகிறேன். இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றே நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால், நான் உறுதியாக சொல்கிறேன். அவர் இந்தியா ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டால் ரன் குவித்து இந்திய அணியில் இடம் பெறுவார். இந்த சீசனில் அவர் பேட்டிங் சராசரி 77 ஆக உள்ளது. இவ்வாறு கூறி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *