பிரித்தானிய குடியிருப்பு ஒன்றில் நடுங்கவைக்கும் சம்பவம்… கைதான பெண்ணைப் பார்த்து அதிர்ந்த மக்கள்
பிரிஸ்டல் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மூன்று இளம் சிறார்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறப்பின் காரணம்
குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி பகல் 12.40 மணியளவில், தொடர்புடைய குடியிருப்புக்கு பொதுவான விசாரணைக்கு சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பொலிசார் அந்த குடியிருப்புக்கு சென்ற சில நிமிடங்களிலேயே சிறார்கள் மூவரும் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் இறப்பின் காரணம் தொடர்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பழகுவதற்கு அருமையானவர்
இந்த விவகாரத்தில் சூடான் நாட்டவரான 42 வயது பெண் ஒருவர் கைதாகியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், பொலிஸ் காவலில் உள்ளார்.
மரணமடைந்த சிறார்களில் இருவர் 8 மற்றும் 4 வயதுடையவர்கள் என்றும், இன்னொருவர் 6 மாத குழந்தை என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைதான பெண்மணி பழகுவதற்கு அருமையானவர் என குறிப்பிட்டுள்ள அக்கம்பக்கத்தினர், அந்த சம்பவம் தொடர்பில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.