உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் மாரடைப்பு போன்றவை தடுக்க… இந்த அரிசியை சாப்பிடுங்க..!
மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வருவதற்கான காரணம் பழங்காலத்தில் பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு ஆண்கள் தங்கள் வலிமையை காண்பிப்பதற்காக இளவட்டக்கல் தூக்குவார்கள். அந்த கல்லை தூக்குவதற்கான வலிமையை தரும் அளவிற்கு இந்த அரிசியில் சத்து நிறைந்துள்ளதால் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வைத்துள்ளனர்.
இதில் இருக்கும் அதிக அளவு நார்சத்து உணவை எளிதில் செரிமானம் அடைய செய்கிறது.
இந்த அரிசி Antioxidant ஆகவும் செயல்படுகிறது, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி நோய்வாய்படுவதிலிருந்து விடுபடலாம்.
Colon cancer போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மற்றும் Fertility-யை Improve பண்ணுவதற்கும் இந்த அரிசி முக்கியமாக பயன்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
மாப்பிள்ளை சம்பா அரிசி வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து மிதமான சூட்டில் குடித்து வந்தால் தீராத வயிற்று வலி மற்றும் அல்சரினால் உண்டாகும் வயிற்று புண்கள் விரைவில் குணமாகும்.
அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது.
பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் வலுவடைகிறது.
பொதுவாகவே மாப்பிள்ளை சம்பா அரியினை வடிக்க ரொம்ப நேரம் ஆகும். கிட்டத்தட்ட இரண்டு மணிநேர வெப்பத்தில் தான் இவை நன்கு வெந்திருக்கும். சில நேரம் மூன்று அல்லது நான்கு மணி நேரம் கூட ஆகியிருக்கலாம். அவ்வாறு வடித்து கிடைக்கும் சாதத்தினை உண்பதால் உடலில் கெட்ட கெழுப்புகள் தங்காது. நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள இரும்புச்சத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் நிலையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வயிற்றுப் பிரச்னைகளை நீக்கக்கூடியது.