என்ன ஆச்சு..! நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ராஷ்மிகா மந்தனா..!
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் முதல் பார்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பார்ட் 2 க்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் அவர் குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்ற விமானம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக அரை மணி நேரத்தில் தரையறுக்கப்பட்டது. இந்த விமானத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் புகைப்படத்தை பதிவிட்டு இன்று நாம் மரணத்திலிருந்து தப்பித்தோம் என்று தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவனத்தில் விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். இந்த வேளையில் அவருடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்தார். இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. மும்பையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை கவனித்த பைலட் உடனடியாக அலர்ட் ஆனார்.மேலும் அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கி உள்ளார். இதனால் விமானத்தில் பயணித்த நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இத்தகைய சூழலில் தான் ராஷ்மிகா மந்தனா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது உயிர் தப்பித்தது எப்படி? என்பது பற்றி போட்டோவுடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது ராஷ்மிகா மந்தனா, நடிகை ஷ்ரத்தா தாசுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ என்பது 2 போட்டோக்களை இணைத்தபடி உள்ளது. முதல் பாதியில் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் சிரித்தபடி உள்ள நிலையில் 2வது பாதியில் அவர்களின் கால்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது இருவரும் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன்புள்ள சீட்டின் மீது அழுத்தமாக மிதித்து இருக்கும் வகையில் அந்த போட்டோ உள்ளது. மேலும், ‛‛உங்களின் தகவலுக்காக.. இப்படித்தான் நாங்கள் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினோம்” என தெரிவித்துள்ளார். அதாவது தான் விமான பயணத்தை ஷ்ரத்தா தாசுடன் மேற்கொண்டதாகவும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பதற்றமடைந்தது மற்றும் இறுதியாக உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சியடைந்ததை வெளிக்காட்டும் வகையில் அவர் இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இருப்பினும் மேற்கொண்டு அவர் எதையும் குறிப்பிடவில்லை. இந்த பதிவை பார்க்கும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.