ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நெறிமுறை..!
இந்தியாவில் தற்போது ஆன்லைன் மூலமான பணப்பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு தகுந்தார் போல மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அதாவது, வங்கி தொடர்பான தகவல்கள், OTP ஆகியவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஏதேனும் லிங்குகள் மூலமாக பணம் அனுப்பும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக பணம் அனுப்பும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அதில் பணத்தை செலுத்துவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். இது மட்டுமில்லாமல், பொது இணையதளம் அல்லது பொது வைஃபை கொண்டு வங்கி கணக்கை அணுகுவதை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.