வரலாறு காணாத விலை உயர்வு : வயல்களில் சிசிடிவி கேமரா பொருத்த விவசாயிகள் முடிவு..!
கடந்த சில நாட்களாக பூண்டின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுவதால் அதனை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியிலும் அவர்கள் துயரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் வயல்வெளியில் இருந்து பூண்டு திருடு போவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வில் இருந்து பூண்டு பயிரை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்தியை கையாளுகின்றனர். அதாவது பூண்டு பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம், பத்னூர் கிராமத்தில் வசிக்கும் பூண்டு விவசாயிகள் தெரிவிக்கையில், அண்மையில் எனது வயலில் இருந்து 8 முதல் 10 கிலோ பூண்டுகளை திருடி போலீசாரிடம் ஒருவர் சிக்கினான். இந்த சம்பவத்திற்குப் பிறகு, எங்களது வயலை சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாத்து வருகிறோம் என்றார்கள். பத்னூரில் மற்றொரு பூண்டு விவசாயி, வயலைக் கண்காணிக்க மூன்று சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளார். 4 ஏக்கர் பூண்டு பயிரில் ரூ. 4 லட்சம் செலவு செய்து 6 லட்சம் ரூபாய் லாபம் வரை விவசாயிகள் லாபம் ஈட்டுகின்றனர்.