இரட்டை கன்னம் உங்களை அசிங்கமா காட்டுகிறதா? அப்போ இப்படி பண்ணுங்க
இரட்டை கன்னம் பெரும்பாலும் எடை அதிகரிப்பால் ஏற்படுகிறது. பலர் இரட்டை கன்னம் காரணமாக தங்கள் தோற்றத்தைப் பற்றி திருப்தியற்று உணர்கிறார்கள். குறிப்பாக தங்களைப் படம் எடுக்கும்போது அவ்வாறு உணர்வார்கள்.
இந்த இரட்டை கன்னத்தை இல்லாமல் செய்வதற்கு சில யோகாசன வழிகளைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இரட்டை கன்னம்
1. நீங்கள் காலையில் எழுந்தவுடன் பத்து நிமிடங்கள் கழுத்தை சுழற்ற வேண்டும். இதைச்செய்வதால் உடல் தளர்வாகும் மற்றும் உங்கள் முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் கூடுதலாக உள்ள கொழுப்புகள் கரையும். இந்த பயிற்சியை 15 அல்லது 17 முறை அங்கும் இங்கும் சுழற்ற வேண்டும்.
2. நீங்கள் நேராக உட்காந்து உங்கள் முகத்தை மேலாக நீட்டவும் பின்னர் கீழே இறக்கவும். இந்த பயிற்சியை தொடர்ந்து பத்து முறை செய்தால் இது சிறந்த பலனைத் தரும். இது முகத்திற்கான ஒரு சிறந்த பயிற்ச்சியாக இருக்கும்.
3.வாயில் காற்றை நிரப்புங்கள் அதை அப்படியே 30 விநாடிகள் வைத்திருங்கள். பின்னர் அதை வலது இடது பக்கமாக மாற்றி மாற்றி ஊதவும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்தால் அது உங்கள் கன்னங்களை மெலிதாக்க உதவும்.
இந்த பயிற்சிகளை நீங்கள் தன்னம்பிக்கையடன் சரிவர செய்தால் கண்டிப்பாக ஒரு நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள். இதை நீங்கள் வீட்டில் இருந்து இலகுவாக செய்யலாம்.