Mor Kulambu: மிகவும் சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு
நாம் எல்லோரும் பொதுவாக காதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம்.
அந்த வகையில் இன்று வெண்டக்காயை வைத்து மோர்க்குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெண்டக்காயில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகினறன. நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும்.
சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஊற வைத்த நீர் அருந்துவது நல்லது.
பிஞ்சு வெண்டக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தால் இருமல், நீர்கடுப்பு சரியாகும்.
இவ்வாறு பல பலன் தரும் வெண்டக்காயை வைத்து மோர்க்குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 3
பூண்டு – 3
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 50 கிராம்
மஞ்சள் – அரை தேக்கரண்டி
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
தயிர் – 2 கப்
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – 2
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி வெண்டைக்காயை பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ,துருவிய தேங்காய், மஞ்சள், சீரகத்தூள் இவை அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்து தயிருடன் சேர்த்துக்கலக்கி கொள்ளவும்.
இந்த கலவையை எடுத்து தனியே வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் ஊற்றி அதில் கடுகு , சீரகம் , காஞ்ச மிளகாய் , கறிவேப்பிலை போட்டு நன்றாக தாளித்து கொள்ளவும்.
பின்னர் வேகவைத்த வெண்டக்காயை இதனுடன் சேர்த்து தாளிக்கவும். இதன் பின்னர் கலக்கி வைத்திருந்த தயிர்கலவையை சேர்த்து ஒரு முறை கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.