“மீண்டும் மோடி அரசு” 24 மொழிகளில் பாடல் வெளியீடு; இணையத்தில் பாஜகவுக்கு உறுதி அளித்த 30 லட்சம் மக்கள்

பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் மீண்டும் மோடி அரசு பிரசார கீதம் வெளியிடப்பட்டது. இது அக்கட்சியின் பிரசார போர் முழக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் நாட்டில் பேசப்படும் 24 வெவ்வேறு மொழிகளில் பாடல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒரு பாடலில் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர்.

விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், நாட்டின் முன்னோடியில்லாத உள்கட்டமைப்பு மற்றும் நிதி வளர்ச்சி, சந்திரயான்-3 திட்டம், ராமர் கோவில் கட்டுதல் போன்ற இணையற்ற சாதனைகள் என பல்வேறு அம்சங்கள் கீதத்தில் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இதுவரை பெண்களுக்கு என்னென்ன பணிகளை செய்துள்ளது என்பதையும் இந்த பாடல் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கொரோனா காலத்தை சமாளிக்க மோடி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள், ஒரு நகரத்தை மற்றொரு நகரத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் கட்டுமானம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலுக்கான தீம் பாடலை கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா ஜனவரி 25ஆம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. நாங்கள் உருவா்குவது கனவுகளை அல்ல நிஜத்தை, அதனால் தான் மோடியை அனைவரும் தேர்வு செய்கிறோம் என்பதுதான் அதன் வரிகள். மேலும் சுவர்களில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பணிகளும் தொடங்கப்பட்டு 360 டிகிரி அணுகுமுறையை அக்கட்சி பின்பற்றி உள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கவனம் செலுத்த முடியும் என நம்புகிறது.

இந்தப் பாடலைத் தவிர, www.ekbaarphirsemonisarkar.bjp.org என்ற இணையதளத்தையும் பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன், வரும் லோக்சபா தேர்தலில், நரேந்திர மோடிக்கு வாக்களிக்க, 30 லட்சம் மக்கள் உறுதியளித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *