மக்களே! கேட்டுக்கோங்க மார்க் ஸக்கர்பர்க் தூங்கி எழுந்த உடனே இதை தான் செய்வாராம்..!
தூங்கி எழுந்தவுடன் என்ன செய்கிறோமோ இல்லையோ நமது ஸ்மார்ட் போன்களை தான் முதலில் கையில் எடுப்போம். வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஜிமெயில் ஆகியவற்றை பார்த்துவிட்டு தான் படுக்கையில் இருந்தே எழுகிறோம்.
எழுந்த உடனே போன் பார்க்கிற என அம்மாக்கள் திட்டினால் கூட பொருட்படுத்த மாட்டோம். நாம் இப்படி போனுக்கு அடிமையாக இருக்க காரணமான மார்க் ஸக்கர்பர்க் தூங்கி எழுந்த உடனே என்ன செய்கிறார்? அவரது அன்றாட பழக்க வழக்கங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
சமூக ஊடகங்களின் தலைமை செயல் அதிகாரி: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என நம் அன்றாட வாழ்க்கையில் பெரிய அளவு நேரத்தை ஆக்கிரமிக்கும் சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க்.
உலக பணக்காரர்களில் ஒருவரான இவர் அவ்வப்போது பேஸ்புக் நேரலையில் வந்து பயனாளிகளின் கேள்விக்கு பதில் அளிப்பார். அவர் கூறும் விஷயங்கள் சுவாரஸ்யமாகி பேசி பொருளாக இருக்கும். அப்படி அண்மையில் அவர் தனது காலை பழக்க வழக்கங்கள் குறித்து தெரிவித்தது தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
காலை எழுந்த உடன் போனை தான் பார்ப்பேன்: பேஸ்புக் நேரலையில் கேள்விக்கு பதில் அளித்த மார்க் ஸக்கர்பர்க், கோடிக்கணக்கான சமூகவலைதள பயனாளிகளை போல நானும், தூங்கி எழுந்தவுடன் என்னுடைய ஸ்மார்ட்போனை எடுத்து பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ் அப்பில் உலக நிகழ்வுகளை தெரிந்து கொள்வேன் என கூறி இருக்கிறார்.
தனக்கு வந்துள்ள மெசேஜ்களையும் அதில் பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். தினமும் காலை எட்டு மணிக்கு தூங்கி எழுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் மார்க் ஸக்கர்பர்க்.
உடற்பயிற்சி, தற்காப்பு கலை பயிற்சி: தூங்கி எழுந்த உடன் போன் பார்த்தாலும் நாள் முழுவதும் போனிலேயே மூழ்கி இருக்க மாட்டேன் என ஏற்கனவே மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார். பல்வேறு நல்ல பழக்கங்களையும் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் அவர் பின்பற்றி வருகிறார். பிரபல அமெரிக்க பாடகி டெய்லர் ஸிஃப்டின் பாடல்களை கேட்பது அவரது அன்றாட வாடிக்கைகளில் ஒன்று.
தற்காப்பு கலை மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம்: தினமும் தற்காப்பு கலை பயிற்சி செய்வதும் மார்க் ஸக்கர்பர்க் தவறாமல் செய்யும் ஒன்று. அதுமட்டுமல்ல உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் கொண்டவர்.
உடலில் கலோரிகளை சமநிலையில் வைத்திருப்பதற்காக தினமும் நான்காயிரம் கலோரிகளை எரிக்கும் வண்ணம் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தான் பழக்கமாக வைத்திருக்கிறேன் என மார்க் ஸக்கர்பர்க் ஏற்கனவே கூறியுள்ளார்.
இரவில் கண் விழிக்கும் பழக்கம் இல்லை: அண்மையில் ஃபோர்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்த மார்க் , இரவில் நீண்ட நேரம் கண்விழித்திருப்பது தனக்கு பிடிக்காது என கூறி இருந்தார். காலையில் எழுந்த போனில் பேஸ்புக் உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு பின்னர் ஈமெயில்களுக்கு பதில் அளிப்பேன், இதற்காக இரவில் கண் விழிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.தொழில் ரீதியாக மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையில் இளைஞர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார் மார்க் ஸக்கர்பர்க்.