Radhika Merchant: முகேஷ் அம்பானி மருமகளாகும் ராதிகா மெர்சென்ட் யார்?: கூகுள் செய்யும் சினிமா ரசிகர்கள்
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ், ஆனந்த், இஷா என மூன்று பிள்ளைகள். அதில் ஆகாஷுக்கும், இஷாவுக்கும் திருமணமாகிவிட்டது. இஷாவுக்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆகாஷுக்கு பிரித்வி என்கிற மகனும், வேதா என்கிற மகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆனந்த் அம்பானிக்கும், அவரின் காதலியான ராதிகா மெர்சென்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் பிப்ரவரி 16ம் தேதி துவங்கியது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருக்கும் அம்பானியின் பண்ணை வீட்டில் ‘Lagan Lakhvanu’ நிகழ்ச்சி நடந்தது.
முதல் பத்திரிகையை சாமிக்கு முன்பு படைக்கும் நிகழ்ச்சி தான் அது. அந்த சடங்கு முடிந்த பிறகே திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலை துவங்கும்.
இதையடுத்து மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மும்பையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அம்பானி வீட்டு திருமணத்தால் சினிமா ரசிகர்கள் தான் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அம்பானி வீட்டு விசேஷம் என்றால் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள். அவர்களை பார்க்கும் ஆசையில் தான் அம்பானி வீட்டு விசேஷத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் பாலிவுட் ரசிகர்கள்.
இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் மனைவியாகப் போகும் ராதிகா யார் என பலரும் கூகுள் செய்கிறார்கள்.
அம்பானிகளை போன்றே ராதிகாவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். என்கோர் ஹெல்த்கேர் நிறுவன (Encore Healthcare)சிஇஓ விரேன் மெர்ச்சென்டின் மகள் தான் இந்த ராதிகா. விரேனின் மனைவி ஷைலாவும், ராதிகாவும் என்கோர் நிறுவன நிர்வாக குழுவில் இருக்கிறார்கள்.
1994ம் ஆண்டு பிறந்த ராதிகா மெர்சென்ட் மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றிருக்கிறார். நாடு திரும்பியதும் ஒரு சில நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு பின்னர் தன் குடும்ப பிசினஸை நடத்தி வருகிறார்.
ராதிகா ஒரு தொழில் அதிபர் மட்டும் அல்ல பரதநாட்டிய கலைஞரும் கூட. அரங்கேற்றமும் செய்திருக்கிறார். பாவனா தாகர் தான் ராதிகாவின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.