Varun Dhawan : பேபி ஜான் பட ஹீரோ வருண் தவானுக்கு பேபி வந்தாச்சு !! மகிழ்ச்சியில் பிரபலங்கள் !! குவியும் வாழ்த்து ..

உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் வருண் தவான். ஹிந்தி படங்களில் நடித்துவரும் இவர் எக்கச்சக்கமான ரசிகர்களை உரித்தாக்கி இருக்கிறார். இவர் இந்திய நடிகர்களுள் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ஒருவராக இருக்கிறார்.

மேலும், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலிலும் இவரிடம் பெற்றார். 2012லிருந்து 2018வரை தொடர்ந்து 11 வெற்றி படங்களை இவர் கொடுத்திருக்கிறார். இந்த 11 வெற்றி படங்களும் வசூல் மட்டுமல்லது விமர்சன ரீதியாகவும் பலதரப்பட்டவர்களை கவர்ந்ததாக இருக்கிறது.

பாலிவுட்டில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகரும் இயக்குனரும் தொலைக்காட்சி பிரபலமான கரன் ஜோகருக்கு உதவி இயக்குனராக பயணித்தை தொடங்கினார் வருண் தவான். அதன்பிறகு நடிப்பிலும் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. 2012 நடிப்பில் தடம்பதித்த வருண் தொடர்ந்து எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

தமிழில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பேபி ஜான் என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் நடிகை வாமிகா கபியும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் வருண் தவான் பிரபல ஆடை வடிவமைப்பாலரான நட்டாஷா தளால் என்பவரை கடந்த 2021ல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களத திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு எக்கச்சக்கமான பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருண் தவானின் மனைவி நட்டாஷா தளால் கருவுற்று இருப்பதாக வருண் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். நாங்கள் கருவுற்று இருக்கிறோம்.. உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கு தேவை.. என்கிற கேப்ஷனோடு வருண் பதிவிட்டிருக்கும் பதிவு ரசிகர்கள் பலரையும் ஈர்த்துள்ளது.

இந்த பதிவின் கமெண்டில் சமந்தா, கரீனா கபூர், பரினீத்தி சோப்ரா, ஆலியா பட், வாணி கபூர், சோபிதா துலிபாலா, பிரியங்கா சோப்ரா, மிருணாள் தாகூர், ராஷி கண்ணா, இலியானா என எக்கச்சக்க பிரபலங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

2021 திருமணமான இவர்கள் தற்போது கருவுற்று இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பதிவை வைரலாக்கி வருணுக்கும் மனைவி நட்டாஷாவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வருண் தவான் நடித்திருக்கும் பேபி ஜான் திரைப்படம் வருகின்ற மே 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *