கவுண்டமணி – யோகி பாபு இணைந்து கலக்கியுள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படப்பிடிப்பு நிறைவு !

Cine craft productions தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “ஒத்த ஓட்டு முத்தையா”. கவுண்டமணி அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த “ஒத்த ஓட்டு முத்தையா” படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது. கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..’மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.. இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங்க முத்து அவர்களின் மகன் வாசன்கார்த்தி & மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா நாகேஷ் பேரன்- கஜேஷ் & அபர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

கவுண்டமணி மனைவியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.. இது தவிர- சிங்கமுத்து..தாரணி..ரவிமரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குனர் சாய் ராஜகோபால் டி.எஸ்.ஆர்.சீனிவாசன்-(ஹட்ச் டாக்) சென்றாயன்..கூல் சுரேஷ்..சதீஷ் மோகன்..காதல் சுகுமார் சிசர் மனோகர் ஆதேஷ் பாலா..மங்கி ரவி..பெஞ்சமின்.. கொட்டாச்சி.. உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *