Sukra 2024: கோடீஸ்வர யோகம் கொடுக்கும் சுக்கிரன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள்
நவகிரகங்களின் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், மகிழ்ச்சி, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். அந்த வகையில் சுக்கிர பகவானின் இடமாற்றும் காதல், வாழ்க்கை, நிதிநிலைமை, மகிழ்ச்சி உள்ளிட்டவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக விளங்கி வருகிறார் இதுவரை தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி முதல் செவ்வாய் பகவான் ஆட்சி செய்து வரும் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார்.
சுக்கிர பகவானின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷப ராசி
சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
மகர ராசி
சுக்கிர பகவான் உங்கள் ராசியில் 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். உங்கள் ராசியின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருவதால் சுக்கிர பகவான் அவரோடு சேர்ந்து உங்களுக்கு நன்மைகளை தரப் போகின்றார். நல்ல செய்தியை கொண்டு விடுவார்கள். இதுவரை நிலுவையில் இருந்த படங்கள் உங்களை தேடி வரும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
துலாம் ராசி
சுக்கிர பகவான் உங்கள் ராசிகள் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் சிக்கி கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும். இந்த ஆண்டு தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.