லிட்டருக்கு 20கிமீ தரும் புதிய ஹைப்ரீட் கார்… 8 – 9 பேர் கூட்டமா பயணிக்க ஏற்ற சுஸுகி கார்!!

2024 சுஸுகி எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் (Suzuki Ertiga Cruise Hybrid) கார் இந்தோனேஷியா நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிரபலமான எர்டிகா காரின் ஹைப்ரீட் வெர்சனான இதில் வழங்கப்பட்டுள்ள வசதிகளையும், என்ஜின் ஆப்ஷன்களையும் பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

எர்டிகா, இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி கார். அதாவது, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார். இந்தியா மட்டுமின்றி, மொத்த தெற்கு ஆசியாவிலும் வாடிக்கையாளர்கள் பலர் விரும்பி தேர்வு செய்யும் எம்பிவி காராக எர்டிகா விளங்குகிறது. இந்த நிலையில், இந்தோனேஷியாவில் சுஸுகி எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் என்ற மைல்ட்-ஹைப்ரீட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்றுவரும் 2024 இந்தோனேஷியா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் எர்டிகாவின் இந்த ஹைப்ரீட் வெர்சன் கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மைல்ட்-ஹைப்ரீட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருப்பது மட்டுமின்றி, எர்டிகா காரின் தோற்றமும் மெருக்கேற்றப்பட்டு உள்ளது. பிடி சுஸுகி இந்தோமொபைல் மோட்டார் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் காரின் விலை 28.8 கோடி ரூபியாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.15.3 லட்சம் ஆகும். எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை இந்தோனேஷியாவில் 30.1 கோடி ரூபியாவாக (ரூ.16 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தோனேஷியா நாட்டில் ஏற்கனவே எர்டிகா ஹைப்ரீட் ஜிஎக்ஸ் என்ற ஸ்ட்ராங் பிளக்-இன் ஹைப்ரீட் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது, மைல்ட்-ஹைப்ரீட் வெர்சன் ஆகும்.

இதனால்தான், இந்த காருக்கு எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் எர்டிகா ஹைப்ரீட் ஜிஎக்ஸ் காரை பிரேவ் காக்கி, சில்கி சில்வர், பர்குண்டி சிவப்பு, மெல்லோ அடர் சிவப்பு, கூல் பிளாக், பேர்ல் ஸ்னோ ஒயிட் மற்றும் மெட்டாலிக் மக்மா கிரே உள்ளிட்ட பெயிண்ட் ஆப்ஷன்களில் சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது.

ஆனால், புதிய எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் கார் பேர்ல் ஒயிட் உடன் கூல் பிளாக் என்ற ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனிலும், கூல் பிளாக் என்ற மோனோ-டோன் பெயிண்ட் ஆப்ஷனிலும் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், புதிய எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் காரின் மூலமாக எர்டிகா எம்பிவி காரின் தோற்றத்தை சுஸுகி நிறுவனம் மேலும் மெருக்கேற்றி உள்ளது.

இதன்படி, சிறிய அளவிலான ஆண்டென்னா, கீழே ஸ்பாய்லர் உடன் ஸ்போர்டியான தோற்றத்திலான முன் பம்பர், சைடு அண்டர் ஸ்பாய்லர், சைடு பாடி டிகால், காருக்கு பின்பக்கத்தில் அப்பர் ஸ்பாய்லர், அண்டர் ஸ்பாய்லர் உடன் ஸ்போர்டியான பின்பக்க பம்பர் உள்ளிட்டவற்றை புதிய எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் கார் பெற்றுள்ளது. இவை எல்லாவற்றையும் விட, எல்இடி டிஆர்எல்-கள் எர்டிகாவில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் புதிய சுஸுகி எர்டிகா க்ரூஸ் ஹைப்ரீட் காரில் கே15பி ஸ்மார்ட் ஹைப்ரீட் பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆம்பியர் திறன் கொண்ட பெரிய பேட்டரி உடன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியின் உதவி இல்லாமலேயே, இந்த பெட்ரோல் என்ஜின் 104 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *