ஆயிரம் இல்ல லட்சக்கணக்குல பணத்தை மிச்சம் பண்ணணுமா? அப்ப இந்த டைப் காரை வாங்குங்க!

நம்மில் பலர் ஹைபிரிட் கார்கள் குறித்து நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலானோருக்கு ஹைபிரிட் கார்கள் அதிக அளவிலான மைலேஜ் தரும் என்பது நமக்கு நன்றாக தெரியும். சாதாரண பெட்ரோல், டீசல் காரை பயன்படுத்துவதை விட ஹைபிரிட் கார்களை பயன்படுத்தினால் பெரும் அளவிற்கு எரிபொருளை சேமிக்க முடியும். இது குறித்த விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் பாருங்கள்.

இன்று கார்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது எலெக்ட்ரிக் காரின் வருகை காரணமாக பலர் பெட்ரோல் கார்களை வாங்கலாமா? எலக்ட்ரிக் கார்களை வாங்கலாமா என ஆலோசனை செய்து வருகிறார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் எலெக்ட்ரிக் காரை வாங்குவது என்பது நீண்ட தூர பயன்பாட்டிற்கு என்பது ஒத்து வராத ஒரு விஷயமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் கார்கள் அதிக ரேஞ்சில் கிடைப்பதில்லை.

இதன் காரணமாகவே பலர் எலெக்ட்ரிக் காரை தவிர்த்து விட்டு பெட்ரோல் காரை வாங்கி வருகின்றனர். ஆனால் இன்று பெட்ரோல் காரை வாங்க விரும்புபவர்களுக்கு மாற்றா ஹைபிரிட் என்ற ஆப்ஷன் இருக்கிறது. ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் சாதாரண பெட்ரோல் காரை விட அதிக மைலேஜ் தரும் காராக இருக்கிறது.

ஹைபிரிட் தொழில்நுட்பம் என்பது ஒரு வாகனத்தில் பெட்ரோல் இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட ஒரு வகை தொழிற்நுட்பம் ஆகும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் பெட்ரோல் இன்ஜினியிலிருந்து பவர் எடுக்காமல் எலெக்ட்ரிக் இன்ஜினியிலிருந்து பவரை எடுத்து காரின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் பெட்ரோல் செலவு குறைவாக ஆகிறது.

இந்த ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இரண்டு விதமான பிரிவுகள் உள்ளன. ஸ்டிராங் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் என இரண்டு வகையாக இது பிரிக்கப்படுகிறது. ஸ்டராங் ஹைபிரிடில் கார் மெதுவாக செல்லும்போது முழுவதுமாக எலெக்ட்ரிக் மோட்டாரிலும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லும்போது மட்டும் பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

இதுவே மைல்டு ஹைபிரிட் என்றால் கார் வேகமாக செல்லும்போது குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு எலெக்ட்ரிக் மோட்டார் உதவும் வகையில் செயல்படும். இதனால் பெட்ரோல் தேவை குறைக்கப்பட்டு எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் பவர் எடுக்கப்பட்டு அதிக மைலேஜ் தரும் வகையில் இந்த வாகனம் செயல்படுகிறது.

இது தொழில்நுட்பம் என்னதான் பயன்பாட்டிற்கு வந்தாலும் ஹைபிரிட் காரர்களின் விலை பெட்ரோல் கார்களின் விலையை விட அதிகமாக இருப்பதால் பலர் கார்களை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். பலர் ஹைபிரிட் கார்கள் லாபம் இல்லை எனவும் பேசி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன என்பதை நாம் சரியாக யோசித்து முடிவு எடுத்தால் ஹைபிரிட் கார்கள் நிச்சயம் லாபகரமாக இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது இன்னோவா ஹைகிராஸ் காரில் ஹைபிரிட் வெர்ஷன் கார்தான் பிரபலமான காராக இருக்கிறது. இதன் பெட்ரோல் வெர்ஷன் ரூபாய் 20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வரும் நிலையில் இதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷன் ரூபாய் 30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த இரு கார்களுக்கும் இடையே ரூபாய் 10 லட்சம் விலை வித்தியாசம் இருக்கிறது.

இப்பொழுது நீங்கள் இன்னோவா ஹைகிராஸ் காரின் பெட்ரோல் வெர்ஷன் காரை வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு 16.31 தான் சராசரி மைலேஜாக கிடைக்கும். ஒரு நாளைக்கு சராசரியாக 200 கிலோமீட்டர் ஓட்டுகிறீர்கள் என்றால் நீங்கள் தினமும் சுமார் 12 லிட்டர் பெட்ரோலை செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதுவே நீங்க இன்னோவா ஹைகிளாஸ் ஹைபிரிட் வேரியன்ட் காரை நீங்கள் ஓட்டுகிறீர்கள் என்றால் நீங்கள் எட்டு லிட்டர் பெட்ரோல் போட்டால் போதும்.

அப்படி என்றால் ஒருநாளுக்கு 4 லிட்டர் பெட்ரோல் மிச்சம் ஆகிறது. ஒரு மாதத்திற்கு பார்த்தால் 120 லிட்டர், ஒரு ஆண்டிற்கு பார்த்தால் 1440 லிட்டர் பெட்ரோல் மிச்சம் ஆகிறது. இதுவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் 14,400 லிட்டர் பெட்ரோல் மிச்சம் ஆகிறது. தற்போது உள்ள பெட்ரோல் விலை படி இதற்கு மதிப்பு போட்டால் சுமார் 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நமக்கு மிச்சமாகும்.

அதாவது தற்போது ஸ்டிராங் ஹைபிரிட் வேரின் காரை ரூபாய் 10 லட்சம் அதிகம் கொடுத்து வாங்கினால் அதை தொடர்ந்து பத்து ஆண்டுகள் பயன்படுத்துவதன் மூலம் நாம் அதிகமாக கொடுத்த 10 லட்சம் போகக் கூடுதலாக ரூபாய் 4 லட்சத்தை மிச்சப்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த விலை என்பது தற்போது உள்ள பெட்ரோல் விலை தான் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *