பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மோதல் – 53 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மோதல் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

மனிதத் தொடர்பில் இருந்து விலகி
பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

மேலும், “பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்” என்றார்.

அவுஸ்திரேலியா, இந்தோனேசியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா தீவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும் மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு முன் எங்கா மாகாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *