இலங்கையின் இறையாண்மையை ஆதரிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம்

இலங்கையின் இறையாண்மையை ஆதரிப்பதற்கு அமெரிக்கா உதவும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

இந்தோ – பசிபிக் மூலோபாயம் குறித்து (USIB) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்க அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு விசேட படகுகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் கரையோர எல்லைகளில் கண்கானிப்பு நடவடிக்கைக்கு உதவும் கிங் விமானத்தையும் இந்த ஆண்டு வழங்க உள்ளோம்.

பொருளாதார மீட்சி குறித்து பாராட்டு
இந்தோ – பசிபிக் கடல்சார் கள விழிப்புணர்வு (IPMDA) முயற்சியின் மூலம், தெற்காசியா உட்பட இந்த பரந்த பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு நிகழ்நேர வணிக செயற்கைக்கோள் தரவை அமெரிக்கா வழங்கும்.

இவ்வாறு கடற்கொள்ளையர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத கடற்றொமில் ஆகியவற்றுக்கு எதிராக நாடுகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இந்த திட்டம் உதவும்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொருளாதார மீட்சி தொடர்பான இலங்கையின் சமீபத்திய முன்னேற்றம் குறித்துப் பாராட்டியதோடு,அனைத்து நாடுகளினதும் சிறிய உதவிகளுடன் இலங்கை வரலாற்று ரீதியாக மீள்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *