MSME நிறுவனங்களுக்கு மெகா அறிவிப்பு.. சேலம் டூ திண்டுக்கல்..!
தமிழ்நாட்டு தொழில்துறையின் முதுகெலும்பாக இருக்கும் MSME துறையை சென்னை, ஓசூர், கோவை, ஈரோடு ஆகியவற்றோடு முடக்கிவிடாமல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
உதாரணமாக ஓசூரில் தற்போது பர்னீச்சர் துறை நிறுவனத்தில் இருந்து விமான உதிரிபாகங்கள் வரையில் பல துறை சேர்ந்த நிறுவனங்கள் சற்றும் தயங்காமல் தொழில்சாலைகளை அமைக்க முக்கியமான காரணம் வலிமையான MSME கட்டமைப்பு தான்.
இந்த பார்மூலாவை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் பெரும் முதலீடுகள் குவிந்து வரும் வேளையில், தமிழ்நாட்டின் உற்பத்தி துறையை வலிமையான வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் விதமாக 3 முக்கிய திட்டங்கள் MSME துறைக்காகவே தமிழ்நாடு அரசு இன்றைய பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மைக்ரோ இண்டஸ்ட்ரியல் கிளஸ்ட்ர்ஸ்: இன்று சட்டசுபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் MSME நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், விருதுநகர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் புதிய மைக்ரோ இண்டஸ்ட்ரியல் கிளஸ்ட்ர்ஸ் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மைக்ரோ இண்டஸ்ட்ரியல் கிளஸ்ட்ர்ஸ் என்பது ஒரு பகுதியில் எந்த தொழில் அதிகமாக செய்யப்படுகிறதோ, எந்த தொழிலில் அதிகப்படியான மக்கள் பணியாற்றுகிறார்களோ அவர்கள் மேலும் பலன் பெற அத்துறையினர் ஒன்றிணைந்து செயல்பட இத்தகைய கிளஸ்டர்ஸ் பயன்படும்.
SIDCO இண்டஸ்ட்ரீல் பார்க்: சிறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் தமிழ்நாடு அரசின் SIDCO-வின் தொழிற்தறை பூங்கா 3 இடத்தில் உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய சிட்கோ தொழிற்துறை பூங்கா திண்டுக்கல், சிவகங்கை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.
தொழில் வளாகங்கள்: தமிழ்நாட்டில் உடனடியாக தொழில் துவங்க வேண்டும் என்ற இலக்கை கொண்டு இருக்கும் நிறுவனங்கள் ஆயத்த தொழில் வளாகங்கள் அதாவது Plug and Play Facilities கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. இப்புதிய வசதிகளை கோயம்புத்தூர், மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது.