70 டெஸ்ட் தான் அதற்குள் கோலியின் ரெக்கார்டை காலி செய்த ஜடேஜா.. இன்னும் 2 பேர் தான் முன் இருக்காங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக இருக்கும் ஜடேஜா தற்போது மிகப்பெரிய சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார். ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் 112 ரன்களும் பந்துவீச்சில் மொத்தமாக 7 விக்கெட் களையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

35 வயதான ஜடேஜா இன்னும் களத்தில் கில்லி போல் செயல்பட்டு பில்டிங்கில் இளம் வீரர்களுக்கு சவால் விடுகிறார். வெறும் 70 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கும் ஜடேஜா ,பேட்டிங்கில் 3005 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு சதம், 20 அரை சதம் அடங்கும்.

இதேபோன்று பந்துவீச்சில் அவர் 287 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சராசரி 24.14 என்ற அளவில் தான் இருக்கிறது. இந்த நிலையில் ஜடேஜா இன்னும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 300 விக்கெட்டுகளை தொட்ட வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த நிலையில் அவர் 70 டெஸ்ட் போட்டியில் விளையாடி விராட் கோலி கும்ப்ளே போன்ற சாதனைகளை சமன் செய்து இருக்கிறார்.

அதாவது இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வாங்கியவர்கள் பட்டியலில் ஜடேஜா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கும்பளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். ஆனால் ஜடேஜா வெறும் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 முறை ஆட்டநாயகனை தனதாக்கி இருக்கிறார்.

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு முன்பாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். டிராவிட் 163 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். தற்போது ஜடேஜா 70 போட்டிகளில் மட்டுமே விளையாடி பத்து ஆட்டநாயகன் விருதை வென்றிருப்பதால் அவரால் எளிதாக சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *