Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 20, 2024 – செவ்வாய்க்கிழமை
மேஷம்:
ஒரு புதிய சந்திப்பு உங்களது வாழ்க்கையில் புதிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தலாம். உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள். ஆசான்களின் வழிகாட்டுதலை பெறுவது உங்கள் முதன்மை கவனமாக இருக்க வேண்டும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயங்காதீர்கள். சுய பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்கவும்.
ரிஷபம் :
உங்களுடைய காதல் சம்பந்தப்பட்ட வேண்டுதல்களுக்கு கூடிய விரைவில் பதில் கிடைக்கும். உங்களது பயணத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். கெரியர் முன்பை விட அர்த்தமுள்ளதாக மாறும். புதிய வாய்ப்புகளை கண்கொத்தி பாம்பாக இருந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே கவனித்துக் கொள்வது உங்களுக்கு மன அமைதியை தரும்.
மிதுனம் :
புதிய மாற்றங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனது உங்களை மன நிறைவான உறவை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதை முழுமையாக நம்புங்கள். ரிஸ்க் எடுக்க தயங்க வேண்டாம். உங்களுடைய கடுமையான உழைப்பிற்கும், அர்ப்பணிப்புக்கும் தகுந்த சன்மானத்தை பெறுவீர்கள். பொருளாதாரம் மீது எப்பொழுதும் கவனமாக இருக்கவும். வாய்ப்புகள் வரும் பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய விஷயங்களை செய்யவும்.
கடகம்:
காதல் வாழ்க்கையில் முக்கியமான தேர்வை செய்யும் நேரம் இது. உங்கள் உள்ளுணர்வு சொல்வதை நம்புங்கள். வரக்கூடிய நாட்களில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். புதிய துவக்கங்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் அமையலாம். போதுமான அளவு ஓய்வெடுத்து உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், இயற்கையோடு நேரத்தை செலவிடவும்.
சிம்மம்:
புதிய காதல் மலர்வதற்கு வாய்ப்புள்ளது. கெரியரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம். பொருளாதார லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனினும் செலவு செய்யும் பழக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய பொருளாதார இலக்குகளில் கவனம் செலுத்தவும். உங்களுடைய உடல் மற்றும் மனநல தேவைக்கு முக்கியத்துவம் தாருங்கள்.
கன்னி:
புதிய நபர் மீது உங்களுக்கு திடீர் ஈர்ப்பு ஏற்படலாம். தற்போதைய உறவில் நேர்மையும், வெளிப்படையான பேச்சு வார்த்தைக்கான அவசியம் உண்டாகலாம். முடிவுகள் எடுப்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம். புதிய பொருளாதார வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வழக்கமான செக்கப்புகள் செல்வதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
துலாம்:
காதல் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் கலந்து காணப்படும். உங்கள் துணையிடத்தில் நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கெரியரில் பொறுமையும், விடாமுயற்சியும் அவசியம். உங்கள் பாதையில் பல்வேறு விதமான தடைகள் வரலாம். எனினும் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி, உங்கள் திறன்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உடற்பயிற்சி செய்யவும், ஓய்வெடுக்கவும் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
காதல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஒரு சில சவால்களை சந்தித்தாலும் இறுதியில் பாசிட்டிவான முடிவு கிடைக்கும். பணியிடத்திலும் ஒரு சில தடைகளை சந்திப்பீர்கள். உங்களுடைய இலக்குகளில் கவனம் செலுத்தி விடாமுயற்சியோடு போராடவும். பயணம் மூலமாக புதிய அனுபவங்களை பெற வேண்டிய நேரம் இது.
தனுசு :
உங்கள் காதல் வாழ்க்கை நேர்மறையான ஆற்றல் நிறைந்து காணப்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலை மேம்படும். அதிகப்படியாக செலவு செய்வதை தவிர்க்கவும். சுய பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான சமநிலையை பின்பற்ற மறக்காதீர்கள்.
மகரம்:
ஒரு புதிய உறவுக்கான துவக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் வீண் வாக்குவாதங்கள் மற்றும் மனக்கசப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் கெரியரை பொறுத்தவரை இது சிறப்பான நேரம். எதிர்பாராத வாய்ப்பு மூலமாக அங்கீகாரம் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் நேர்மறையான முன்னேற்றம் காணப்படும். உடல் மற்றும் மனநலனில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யக்கூடிய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.
கும்பம்:
காதல் உறவுக்குள் ஆழ்ந்த பிணைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உண்டாகும். எனினும் ஒரு சவாலான சூழ்நிலையை கடந்து வர வேண்டிய நிலை ஏற்படலாம். கெரியரில் புதிய வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி உங்களுக்காக காத்திருக்கிறது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க தேவையான வழிகளை கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது.
மீனம்:
காதல் வாழ்க்கை திருப்திகரமானதாக அமையும். எனினும் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கெரியரில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் சுய பராமரிப்பு பயிற்சிகள் மூலமாக ஆரோக்கியத்தில் நேர்மறையான முன்னேற்றம் காணப்படும்.