தங்க நிற புடவையில் தக தகவென மின்னும் நடிகை ஹன்சிகா.. வைரல் போட்டோஸ்!
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
அதை தொடர்ந்து வேலாயுதம், புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட், சிங்கம், அரண்மனை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார் ஹன்சிகா.
தொடர்ந்து, தமிழில் அவர் நடித்த படங்கள் அவருக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ஹன்சிகாவின் கொஞ்சல் நடிப்பு, வசீகரிக்கும் தோற்றமும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ஒரு கட்டத்தில் நடிகை ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் எகிறியது. விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டார் நடிகை ஹன்சிகா.
ஒரு கட்டத்திற்கு பின், பிசி நாயகியாக வலம் வந்த ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது.
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையவும் ஹிந்தி பக்கம் சென்றார் ஹன்சிகா. தற்போது தமிழ் மற்றும் இந்தி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் .
2022 ஆம் ஆண்டு சோஹைல் கத்துரியா என்பவரை காதலித்து பல கோடிகள் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா.
இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அதிகப்படியான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.
தனது அழகிய போட்டோஷூட்டுகளை பதிவிட்டு வரும் ஹன்சிகா. சம்பத்தில் தங்க நிற புடவையில் தக தகவென ஜொலிக்கும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் . அந்த அசத்தல் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல்.