3 கெட்டப்பில் சிவகார்த்திகேயன்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் அமரன் படக்குழு?!
அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 3 கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது கிடைத்திருக்கும் அப்டேட் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அயலான் திரைப்படம் சுமாரான வரவேற்பு பெற்றது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பொங்கலையொட்டி இந்த படம் வெளிவந்தது. அத்துடன் கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் ஒன் உள்ளிட்ட படங்களும் பொங்கலையொட்டி வெளியாகின.
இவற்றில் மிஷன் திரைப்படம் மட்டும் ஓரளவு வரவேற்பு பெற்றது. இதில் அருண் விஜய் முன்னணி கேரக்டரில் நடித்திருந்தார். ஏ.எல். விஜய் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிக்கும், சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தில் டீசர் அவரது பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
வழக்கமாக காமெடி கலந்த ஆக்சன் கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இந்த டீசரில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக வசனங்களை பேசியுள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இந்த திரைப்படம் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமரன் படத்தில் 3 கெட்டப் களில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை வெட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே முருகதாஸ் இயக்கும் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.