திருச்சி மாவட்டத்திற்கான பட்ஜெட் அறிவிப்புகள் ஒர் பார்வை..!
2024-25 தமிழ்நாடு பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்கான அறிவிப்புகள் குறித்த முழு விவரம் :
திருவெறும்பூர் பகுதியில் உயர் பாதுகாப்பு கொண்ட நவீன சிறைச்சாலை திருவெறும்பூர் பகுதியில் ₹104 கோடி மதிப்பில் கட்டப்படும்
திருச்சி – ஸ்ரீரங்கம் இடையே உயர் மட்ட பாலம் வரும் நிதியாண்டில் அமைக்கப்படும்
திருச்சி மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்படும்
அரசு தனியார் பங்களிப்பு முறையில் பொதுக்கழிப்பிடங்களை நவீன முறையில் சீரமைத்து, பராமரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்
திருச்சியில் ஓடும் காவிரி ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வு நடத்தப்படும்.உள்ளிட்ட திட்டங்கள் திருச்சி மாவட்டத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளன.