“அண்ணே என்ன மன்னிச்சிடுங்க” கண்ணீர் விட்டு கதறி அழுத விஷால்!
விஜயகாந்த் மறைவையடுத்து நடிகர் விஷால் கண்ணீர் விட்டு கதறி அழுது இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், பொதுமக்கள் என அனைவரும் வரிசையாக விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷால், வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், அண்ணே.. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த நேரத்தில் நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் முகத்தை ஒருமுறை பார்த்து உங்கள் காலை தொட்டுக் கும்பிட்டிருக்க வேண்டும். நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் எங்களைப் போன்ற ஆட்கள் நல்லது செய்வது சாதாரணம் அல்ல. உங்களிடமிருந்து அதை நான் கற்றுக் கொண்டேன். உங்கள் அலுவலகத்துக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு சோறு போட்டு அனுப்புவீர்கள்.
#JUSTIN விஜயகாந்த் மறைவு – நடிகர் விஷால் கண்ணீர் மல்க வீடியோ பதிவு #DMDK #vijayakanth #RIPVijayakanth #Captain #Vishal #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/5U4VBEXqqd
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 28, 2023
ஒரு அரசியல்வாதி, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகியோ என்பதை விட ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு மனிதராக பேர் வாங்குவது சுலபம் அல்ல. சிலருக்கு மட்டுமே அந்த பேர் நீடிக்கும். என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணே. சத்தியமாக சொல்கிறேன். நான் உங்களுடன் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.