தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு விநியோகம் துவக்கம்..!

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் பிப்ரவரி 19-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை செயலாளர் அன்பகம் கலை, துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் விருப்ப மனு வினியோக பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாளான நேற்று திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினர் 20 பேர் ஒவ்வொருவராக விருப்ப படிவத்தினை ரூ. 2 ஆயிரம் செலுத்தி வாங்கிச் சென்றனர்.

விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும் போது கட்டணமாக ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும். விருப்ப மனுக்களை மார்ச் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *