சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

சண்டிகார் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை இன்டியா கூட்டணி இணைந்து எதிர்கொண்டது. பா.ஜ.க.வும் வேட்பாளரை நிறுத்தியது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்டார். இன்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டார்.

இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இன்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இன்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

தொடர்ந்து பஞ்சாப் – அரியானா ஐகோர்ட்டில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. பா.ஜ.க வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடையும் கோரியது ஆம் ஆத்மி. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார். கடந்த 5-ம் தேதி ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சண்டிகார் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை நாளை (இன்று) பிற்பகலுக்குள் சமர்ப்பிக்கவும் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை சமர்ப்பிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஜனநாயகத்தில் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் வேறு தேர்தல் அதிகாரியை துணை ஆணையர் நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி எந்த கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற பதிவாளர் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட வேண்டும். மேலும் அனைத்து வாக்கு சீட்டுகளையும் உயர்நீதிமன்ற பதிவாளர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை பார்த்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு மீண்டும் எடுக்கப்படும் என்று கூறினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *