இன்ஸ்டாகிராமில் அனுப்பிய மெசேஜை மீண்டும் எடிட் செய்யலாம்… புதிய அம்சம் அறிமுகம்!
மெசேஜ்களை அனுப்பிய 15 நிமிடத்திற்கு உள்ளாக அதனை எடிட் செய்யக்கூடிய வசதியை யூசர்களுக்கு புதிய அம்சம் மூலமாக இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது மாதிரியான அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற அப்ளிகேஷன்களில் உள்ளது. தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு தர்ம சங்கடத்துக்கு ஆளாக கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.
ஒரு மெசேஜை அனுப்பி விட்டு அதனை டெலீட் செய்யும் அசௌகரியத்தில் இருந்து விடுபடுவதற்கு இந்த அம்சம் யூசர்களுக்கு உதவி புரிகிறது. ஆனால் இந்த அம்சத்தை நீங்கள் மெசேஜை அனுப்பிய 15 நிமிடத்திற்கு உள்ளாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அப்ளிகேஷனைப் போல மெசேஜ்களை அனுப்பிய 15 நிமிடத்திற்குள் அதனை ஒருவர் எடிட் செய்யலாம். அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அந்த மெசேஜை எடிட் செய்ய முடியாது. இன்ஸ்டாகிராமை திறந்து ஏதேனும் ஒரு உரையாடலுக்கு செல்லுங்கள். நீங்கள் எடிட் செய்ய நினைக்கும் மெசேஜை லாங் பிரஸ் செய்யவும்.
மெனுவிலிருந்து Edit என்பதை தேர்வு செய்யவும் (மெசேஜை அனுப்பிய 15 நிமிடத்திற்கு உள்ளாக). தேவையான மாற்றங்களை செய்து மெசேஜை அப்டேட் செய்யவும். பின்னர் “Send” என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் அனுப்பிய மெசேஜுக்கு கீழே “Edited” என்று டிஸ்ப்ளே செய்யப்பட்டிருக்கும்.
திரெட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
பல்வேறு விதமான அப்டேட்டுகளுக்கு நடுவில் இன்ஸ்டாகிராம் அதன் புதிய அப்ளிகேஷன் ஆன Threads என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. Threads என்பது டெக்ஸ்ட் மெசேஜ் உரையாடல் சம்பந்தப்பட்ட ஒரு அப்ளிகேஷன். உலக நடப்பு பற்றி தெரிந்துகொள்ளவும், அது பற்றிய உங்களது உரையாடலை துவங்கவும் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தலாம். இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கு இது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். இது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்வதற்கு கிடைக்கிறது.
இன்ஸ்டாகிராமில் இதை பின்பற்றுங்கள் :
அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று “Threads, an Instagram app” என்று தேடவும். பின்னர் அதனை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்யவும். Threads அப்ளிகேஷனை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.
உங்களுடைய அக்கவுண்ட்டை உருவாக்கவும் :
Threads ஏற்கனவே உங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆகவே நீங்கள் சைன் அப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே வெல்கம் ஸ்கிரீன் கீழே தெரியும் உங்களது யூசர் நேமை மட்டும் கிளிக் செய்யுங்கள்.
உங்களது ப்ரொபைலை அமைக்கவும் :
லாகின் செய்த பிறகு நீங்கள் உங்களுடைய Threads ப்ரொபைலை அமைத்து டெக்ஸ்ட் அப்டேட்டுகளை ஷேர் செய்யலாம். மேலும் பொது விவாதங்களில் ஈடுபடலாம்.