SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தி ATM-ல் பணம் எடுக்கலாம்.. எப்படினு தெரியுமா?

ஒருவேளை உங்களிடம் SBI கிரெடிட் கார்டு இருந்தால் கேஷ் அட்வான்ஸ் வசதியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் இருந்து பணத்தை நீங்கள் வித்ட்ரா செய்து கொள்ளலாம். கேஷ் அட்வான்ஸ் வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வரையிலான பணத்தை வங்கி அல்லது ATM மூலமாக நீங்கள் வித்ட்ரா செய்யலாம். வங்கி வழங்கிய கிரெடிட் கார்டை வைத்திருக்கக் கூடிய கஸ்டமர்களுக்கு SBI இந்த சேவையை வழங்குகிறது. SBI கிரெடிட் கார்டு பல்வேறு விதமான வசதிகளுடன் வந்தாலும் இதனை பயன்படுத்தி ATM இல் நீங்கள் பணத்தையும் வித்ட்ரா செய்யலாம். ஆனால் வித்ட்ரா செய்ய அனுமதிக்கப்படும் தொகை மற்றும் இந்த வசதியை பயன்படுத்துவதற்கான கட்டணங்கள் ஒவ்வொரு கார்டை பொறுத்து மாறுபடும்.
SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணத்தை எப்படி வித்ட்ரா செய்வது என்பதற்கான படிகள்:-
முதலில் நீங்கள் ATM கவுண்டருக்கு செல்ல வேண்டும்.
SBI கிரெடிட் கார்டை ஸ்லாட்டில் சொருகவும்.
பின்னர் ஸ்கிரீனில் பட்டியலிடப்பட்டுள்ள மொழியிலிருந்து உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யவும்.
அதன் பிறகு “கேஷ் வித்ட்ராயல்” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் வித்ட்ரா செய்ய நினைக்கும் தொகையை ஸ்கிரீனில் என்டர் செய்து “என்டர்” என்பதை தட்டவும்.
நீங்கள் என்டர் செய்த தொகை உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.
SBI கிரெடிட் கார்ட் கேஷ் வித்ட்ராயல் லிமிட்டை எப்படி சரி பார்ப்பது?
கேஷ் வித்ட்ராயல் லிமிட் என்பது ஒரு கார்டுஹோல்டர் தன்னுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி வித்ட்ரா செய்து கொள்ள அனுமதிக்கப்படும் தொகையாகும்.
இது உங்களது கிரெடிட் கார்டு லிமிட்டை பொறுத்து அமையும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட கார்டின் கிரெடிட் லிமிட் 2 லட்ச ரூபாய் எனில், இந்த கார்டுக்கான கேஷ் அட்வான்ஸ் லிமிட் என்பது அந்த லிமிட்டில் 20% முதல் 80% வரை இருக்கும்.
கேஷ் லிமிட் 20% ஆக இருந்தால் அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி கார்டு ஹோல்டர் 40,000 ரூபாய் பணத்தை வித்ட்ரா செய்யலாம். இதுவே 80 சதவீதமாக இருந்தால் 1,60,000 ரூபாய் பணத்தை வித்ட்ரா செய்யலாம். பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு SBI வழக்கமாக 80% கேஷ் அட்வான்ஸ் லிமிட்டை வழங்குகிறது.
SBI கிரெடிட் கார்டு மீதான வட்டி விகிதம்
SBI கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பொழுது கார்டு ஹோல்டர்கள் கேஷ் அட்வான்ஸ் வசதியை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். பெரும்பாலும் இதற்கான கட்டணம் நீங்கள் பணத்தை வித்ட்ரா செய்த நாளில் தொடங்கி அந்தத் தொகையை நீங்கள் முழுவதுமாக செலுத்தி முடிக்கும் வரை மாதவாரியாக வசூலிக்கப்படும். SBI வழிமுறைகளின் படி ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒரு மாதத்திற்கு 2.25 சதவீதம் முதல் 3.35 சதவீதம் வரையிலான பல்வேறு வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது.