அதே பழைய சத்தம் வரும்! புதிதாக தயாராகும் ஆர்எக்ஸ் 100 பைக் பற்றி முக்கிய அப்டேட்ட வெளியானது!
90களில் இளைஞர்களை கவர்ந்த யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 100 பைக் தற்போது முற்றிலும் புதிய இன்ஜின் உடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் மீது மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளதால் இந்த பைக்கின் விற்பனை மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தற்போது வெளியான முக்கிய அப்டேட் குறித்த தகவல்களை காணலாம் வாருங்கள்.
யமஹா நிறுவனத்தின் 100 பைக் இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்த பைக் என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் இந்த பைக் சென்றால் திரும்பிப் பார்க்காத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான பைக்காக இந்த பைக் இருந்தது. லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற இந்த பைக் இன்றளவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த பைக்கிற்க்கு மிகப்பெரிய கிராக்கி இருக்கிறது. பலர் இந்த பைக்கை தொடர்ந்து சிறப்பாக பராமரித்து பல ஆண்டுகளாக இந்த பைக்கை ரன்னிங் கண்டிஷனில் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 1996-ம் ஆண்டு இந்த பைக்கின் தயாரிப்பு என்பது நிறுத்தப்பட்டு விட்டது. சுமார் 30 ஆண்டுகளாக போகும் நிலையில் இன்றளவும் இந்த பைக் பல்வேறு நபர்களால் முறையாக பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த யமஹா ஆர்எஸ்100 பைக்குக்கு இருக்கும் பெயரை பயன்படுத்தி யமஹா நிறுவனம் மீண்டும் தனது ஆர்எஸ்100 பைக்கை ஆர்எக்ஸ் பெயருடன் களம் இறக்க முடிவு செய்துள்ளது. ஆனால் பழைய ஆர்எஸ்100 பைக்கில் 98.2 சிசி 2 ஸ்டோக் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால் இந்த இன்ஜினை பயன்படுத்த தற்போது தடை என்பதால் முற்றிலுமாக புதிய இன்ஜினை தான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை யமஹா நிறுவனத்திற்கு இருக்கிறது. இந்நிலையில் எந்த இன்ஜினை நிறுவனம் பயன்படுத்த போகிறது என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. பலரும் இதை எதிர்பார்த்து வருகின்றனர்.
புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது உள்ள அரசு கட்டுப்பாடான பிஎஸ்6 இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய இன்ஜின் தயாரிக்கப்பட வேண்டும் என்பதால் யமஹா நிறுவனம் 225.9 சிசி திறன் கொண்ட இன்ஜினை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த இன்ஜினை தான் தனது ஆர்எக்ஸ் பைக்கில் உட்படுத்த போவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன.
இந்த இன்ஜினை பொறுத்தவரை 20.1பிஎச்பி பவரையும் 19.93என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக் ஆர்எஸ்100 என்ற பெயரிலேயே வரப்போகிறதா அல்லது வேறு பெயர் மாற்றப்பட்டு ஆர்எக்ஸ் என்ற பெயர் மட்டும் மீண்டும் தொடர போகிறதா என்ற விபரங்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ1.25 லட்சம் முதல் ரூ1.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பைக் சற்று குறைந்த விலையில் சில பிரிமியம் அம்சங்கள் நிறைந்த பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் பார்ப்பதற்கு அப்படியே ஆர்எக்ஸ் 2100 பைக்கின் லுக் போலவே இருக்கும் படி அந்நிறுவனம் இந்த பைக்கை வடிவமைக்க முடிவு செய்துள்ளது. பைக் என்றாலே ஸ்லீக்கான குறைந்த எடை கொண்ட வடிவமைப்பு என்பது அதற்கு பெயர் பெற்ற வடிவமைப்பாக உள்ளது. அதே வடிவமைப்பு இந்த பைக்கிலும் இடம் பெறும்.
இது மட்டுமல்ல ஆர்எக்ஸ்100 பைக்கிற்க்கு மிக முக்கியமாக அதன் சத்தம் மற்றும் பவர்ஃபுல்லான இன்ஜின் என்பது மிக முக்கிய அடையாளமாக இருக்கிறது. அதே சத்தம் மற்றும் பவர்ஃபுல்லான இன்ஜினுடன் புதிய 4 ஸ்டிரோக் பைக்கை தயாரிக்க அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. சட்டத்திற்காக இதன் சைலென்சர் வடிவமைப்பையும் அதே நேரம் பவர்ஃபுல் இன்ஜினாக இருக்க வேண்டும் என்பதற்காக 225 சிசி இன்ஜினையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் மூலம் யமஹா ஆர்எஸ்100 பைக் தனது 100 சிசி செக்மெண்டை விட்டு வெளியேறி 225 சிசி செக்மெண்டில் தயாரிக்கப்படும் பைக்காக மாறி தனது பவர்ஃபுல்லான இன்ஜினுடன் இளைஞர்களை கவரும் வகையில் இந்த பைக் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையும் குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த பைக் வாங்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.