போட்டியாளர்களுக்கு சவால் விடுக்குமா.! 2024 மஹிந்திரா எக்ஸ்யூவி 300

காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட 2024 எக்ஸ்யூவி 300 மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முக்கிய மாற்றங்கள் மற்றும் வசதிகள் குறித்தான தகவலை அறிந்து கொள்ளலாம்.

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் கிடைக்கின்ற பிரசத்தி பெற்ற டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் மாருதி சுசூகி பிரெஸ்ஸா ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் எக்ஸ்யூவி 300 கிடைக்கின்றது.

2024 மஹிந்திரா XUV300 எஸ்யூவி முக்கிய எதிர்பார்ப்புகள் ;-

புதிய எக்ஸ்யூவி300 காரில் 110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோலுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

117hp பவர் மற்றும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

டாப் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோலில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் வரவுள்ள மாடலில் எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் காரினை போன்ற டேஸ்போர்டினை பெற வாய்ப்புள்ளது.

புதிய டேஸ்போர்டில் இரண்டு 10.25 அங்குல ஸ்கீரின் பெற்று ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றொன்று டிஜிட்டல் கிளஸ்ட்டராக இருக்கும்.

டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, கூலிங் இருக்கைகள் மற்றும் ரியர் ஏசி வென்ட் பெற்றிருக்கும்.

அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கடும் போட்டியை தனது போட்டியாளர்களுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *