இந்தியாவில் மீண்டும் மிட்சுபிஷி கார் விற்பனைக்கு அறிமுகமா..?

டிவிஎஸ் மற்றும் மிட்சுபிஷி மோட்டாருக்கு இடையில் ஏற்பட்டுள்ள கூட்டணி மூலம் டிவிஎஸ் மொபைலிட்டி பிரிவின் 32 சதவீத பங்குகளை ஜப்பானிய நிறுவனம் 300 கோடி மதிப்பில் வாங்க உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் நாடு முழுவதும் மொபைலிட்டி தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

TVSVMS இந்தியாவின் முன்னணி வாகன டீலர்களில் ஒன்றாக விளங்குகின்றது. இந்நிறுவனம் ஹோண்டா, ரெனால்ட், அசோக் லேலண்ட் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட பல வாகன உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களின் விநியோகம் மற்றும் சேவையை வழங்கி வருகின்றது. தற்பொழுது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 152 டீலர்ஷிப்களை பெற்றுள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் துவக்க கட்டத்தில் டீலர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், சிறப்பான சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது வாகன விற்பனை, வாகனங்களின் செயல்பாடு மற்றும் வாகன சேவை (மைக்ரோ மொபிலிட்டி) தீர்வுகளுக்கு புதிய வணிகமானது நாட்டில் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏற்கனவே, டிவிஎஸ் மொபிலிட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் ஹோண்டா கார்களுக்கான விற்பனை நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதே ஆரம்பக்கட்ட திட்டமாக உள்ளது. கூடுதலாக, மிட்சுபிஷி கார்ப்பரேஷன் மற்ற ஜப்பானிய பிராண்டுகளுடன் TVS வாகன மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிராண்ட்/மாடல் வரிசையை மேலும் பல்வகைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ள மிட்சுபிஷி மோட்டார்ஸ் மீண்டும் இந்திய சந்தையில் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *