தடபுடலாக நடந்த அருண் விஜயின் அக்கா மகள் தியா – தில்லான் திருமணம்! ஒன்று கூடிய குடும்பத்தில்.. வனிதா மிஸ்ஸிங்!
அருண் விஜய்யின் அக்கா அக்கா மகள் தியாவின் திருமணம், மிக பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் – முத்து கண்ணு தம்பதியின் இரண்டாவது மகளான மருத்துவர் அனிதா – கோபால கிருஷ்ணனின் மகள் தியாவுக்கு நேற்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
தியா, தொழிலதிபரின் மகன் தில்லான் என்பவரை கரம்பிடித்தார்… இவர்களின் திருமணம், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடந்த, மஹாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.
தியா திருமணத்தால் கடந்த ஒரு வாரமாகவே, விஜயகுமாரின் குடும்பத்தினர்… கொண்டாட்டமான மூடில் இருந்த நிலையில், திருமணத்திற்கான ஒவ்வொரு விஷயத்தையும்… காசை கொட்டி பார்த்து பார்த்து செய்திருந்தார் அனிதா.
மெஹந்தி, ஹல்தி, போன்றவரை அவுட்டோரில் நடந்த நிலையில், ரிசெப்ஷன், வெட்டிங் பார்ட்டி போன்றவை தனக்கான தனி செட்டப் போடப்பட்டு நடந்தது.
இதை தொடர்ந்து, தியா – தில்லான் திருமணம் பக்கா ட்ரெடிஷனல் செட்டப்பில் நடந்துள்ளது. மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்க நிற சேலையில்.. தகதகவென மின்னினார் தியா.
மேலும் இந்ததிருமணத்தில், இரு வீட்டை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள், விஐபிக்கள், விவிஐபிக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினேகா, போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தற்போது திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஒட்டு மொத்த குடும்பமும் தியா குடும்பத்தில் இருந்தாலும்… இதே குடும்பத்து பெண்ணான வனிதா மட்டும் இல்லையே? என சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.